9 ஆம் வகுப்பு அறிவியல் – இயற்பியல்
TOP – 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 15
1. அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும்
ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளதுபோல் தெரியும் – துருவ விண்மீன்
2. நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால், துருவ விண்மீன் ஒரே இடத்தில் நகராமல் உள்ளதுபோல்
தோன்றுகிறது.
3. புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை.
4. புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் – செவ்வாய்
5. செவ்வாய் கோளிற்கு இரண்டு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. 1. டீமோஸ் 2. போபோஸ்
6. செவ்வாய் கோளில் ஒரு நாள் என்பது – 24 மணி நேரம்
37 நிமிடம் 22 வினாடிகள்
7. செவ்வாய் கோளில் ஒரு வருடம் என்பது – 686.96 புவி
நாள்கள் – கிட்டத்தட்ட 687 நாள்கள்.
8. கோள்களிலேயே மிகப்பெரிய கோள் – வியாழன்
9. வியாழன் கோளானது புவியை விட 11 மடங்கு பெரியது,
318 மடங்கு எடை கொண்டது.
10. வியாழன் கோளிற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும்
உள்ளன (இதில் ஒன்று கானிமீடு)
11. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவு – கானிமீடு
12. வியாழன் கோளில் ஒரு நாள் என்பது – 9 மணி நேரம்
55 நிமிடங்கள் 30 வினாடிகள்
13. வியாழன் கோளில் ஒரு வருடம் என்பது – 11.862 புவி வருடங்கள்
14. வளையங்களுக்கு பெயர் போன கோள் – சனி
15. சனி கோள் ------------------------ நிறத்தில் காணப்படுகிறது – மஞ்சள்
16. வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோள் – சனி
17. சனி கோளின் சுழற்சி காலம் – 10.7 மணி நேரம்
18. சனி கோளின் சுற்றுக் காலம் – 29.46 புவி ஆண்டுகள்
19. சனி கோளில் 60 நிலவுகள் உள்ளன. அவற்றில் பெரியது டைட்டன் நிலவே
20. நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு – டைட்டன்
21. சனி கோளின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
22. ஒரு குளிர்மிகு வாயு பெருங்கோள் – யுரேனஸ்
23. சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் – யுரேனஸ்
24. யுரேனஸ் கோள் மிகவும் சாய்ந்த சுழல் அச்சை கொண்டுள்ளதால் உருளும் கோள் எனவும் அழைப்பர்
25. யுரேனஸ் கோளின் சுழற்சி காலம் – 17. 2 மணி நேரம்
26. யுரேனஸ் கோளின் சுற்றுக் காலம் – 84 புவி ஆண்டுகள்
27. யுரேனஸ் கோளின் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும் குளிர்காலமும்
மிக நீண்டு இருக்கும். ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
28. பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும் கோள் – நெப்டியூன்
29. மிகவும் காற்று வீசக்கூடிய கோள் – நெப்டியூன்
30. 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை எந்த கோள் நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதையை
கடக்கிறது? – புளூட்டோ கோள் – இந்த நிலை 20 ஆண்டுகளுக்கு
தொடர்கிறது.
31. நெப்டியூன் கோளில் 13 நிலவுகள் உள்ளன. இதில் டிரைட்டான் நிலவே மிக பெரியது.
32. சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே
நிலவு – டிரைட்டான்
33. சிறுகோள்கள் (Asteroids) – செவ்வாய் கோளின்
சுற்றுப்பாதைக்கும் வியாழன் கோளின் சுற்றுப்பாதைக்கும் இடையே உள்ள லட்சக்கணக்கான பாறைத்துண்டுகள்
34. மிகப்பெரிய சிறு கோள் – செரஸ்
35. செரஸ் கோளின் விட்டம் – 964 கிமீ
36. சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கொரு முறை நம் பூமியின் மீது சிறுகோள் விழுவதுண்டு. அது 10 கிமீ அகலம் கொண்டதாக
இருக்கும். இவற்றையும் பெரிய தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும்.
37. அதி நீள்வட்டப் பாதையில் நம் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி
நிறைந்த பொருள்கள் – வால் நட்சத்திரம (Comets)
38. ஒரு சில பெரிய வால் விண்மீன்களுக்கு 160 மில்லியன்
(16 கோடி) கிலோமீட்டர் நீளமுள்ள வால் உள்ளது.
39. ஹாலி வால்விண்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும்.
40. ஹாலி வால்மீன் கடைசியாக பார்க்கப்பட்ட ஆண்டு – 1986 – மீண்டும் 2062 ஆம் ஆண்டு தெரியும்.
41. காஸ்மிக் ஆண்டு - நொடிக்கு 250
கிமீ (மணிக்கு 9 இலட்சம் கிமீ) வேகத்தில் பால்வெளி வீதியை சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும்
காலம்
42. காஸ்மிக் ஆண்டு 225 மில்லியன் புவி
ஆண்டுகளுக்கு சமம்.
43. விண்கற்கள் (Meteors):
Ø சூரியமண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகளே
விண்கற்கள்
Ø மிக அதிக வேகத்துடன் பயணிக்கும், வரும் வழியில் வளிமண்டல உராய்வின்
காரணமாக எரிந்துவிடுகின்றன.
44. விண்கற்கள் முழுவதுமாக எரியாமல் கற்களாக பூமியில் மீண்டும் வீழ்வதுண்டு
இவை விண் வீழ்கற்கள் (Meteorites)
45. ஒரு சுற்றுப்பாதையில் சூரியமண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள்
– துணைக்கோள்கள்
46. இயற்கையான துணைக்கோள்களை நிலவுகள் என்று அழைப்பர்.
47. நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் – 27.3 நாள்கள்
48. நிலவின் சுற்றுப்பாதையின் ஆரம் – 3.85×105 கிமீ
49. சூரியமண்டலத்திலுள்ள கோள்களுள் புதன் மற்றும்
வெள்ளி கோள்களைத் தவிர மற்ற அனைத்திற்கும்
நிலவுகள் உள்ளன.
50. சூரியன்:
·
இலத்தின் மொழியில்
ஸோல் என்றும்
கிரேக்க மொழியில் ஹீலியோஸ் என்றும் சூரியன் அழைக்கப்படுகின்றது.
·
சூரியன் நடுத்தர
அளவுடைய விண்மீன்
·
சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது
·
சூரியன் மஞ்சள் நிறக் கதிர்களை மட்டும் உமிழ்கிறது
என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறானது, சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில்
அனைத்து நிறங்களும் உள்ளன. ஆனால் அவையனைத்திலும் மஞ்சள் நிறமே
அதிக செறிவுடன் காணப்படுகிறது.
·
நீலம் மற்றும் ஊதா
நிறங்கள் அதிகமாகவும் சிவப்பு நிறம் குறைவாகவும் சிதறலுக்குட்படுகின்றன.
·
முக்கால் பகுதி ஹைடிரஜன் வாயுவாலும், கால் பகுதி ஹீலியம் வாயுவாலும் நிரம்பியுள்ளது.
·
பூமியை விட மில்லியன்
மடங்கு பெரியது.
·
அதிக அழுத்தத்தில்
ஹைடிரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன.
·
அணுக்கரு இணைவு என அழைக்கப்படும் நிகழ்வினால், பெருமளவு ஆற்றல் ஒளி வடிவிலும் வெப்ப
வடிவிலும் உருவாகின்றன.
·
சூரிய மண்டலத்தின்
மையத்தில் சூரியன் அமைந்துள்ளது.
·
சூரியன் ஏறத்தாழ
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றது.
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, B.Ed, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3.
செ. லெனின் M.Sc, B.Ed
கருத்துகள்
கருத்துரையிடுக