உதய் மின் திட்டம் - உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா
(Ujwal DISCOM Assurance Yojana (UDAY)
Ø பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களின் மின் விநியோகத்
திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் விநியோக அமைப்புகளின் வட்டிச்
சுமையை குறைக்கவும் ‘உஜ்வால் டிஸ்காம்
அஷ்யூரன்ஸ் யோஜனா’ (உதய்) என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது.
Ø இத்திட்டத்தை அப்போதைய
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த பியூஸ்கோயல் தொடங்கிவைத்தார். நவம்பர் – 2015.
Ø ‘2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த
கடனில், 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை
மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட
பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
Ø இத்திட்டத்தில் இணைந்த முதல் மாநிலம் – ஜார்கண்ட் ஜனவரி - 2016
Ø இத்திட்டத்தில் மிக முக்கிய அம்சமான காலாண் டுக்கு ஒருமுறை மின் கட்டண மாறுதல் செய்யும் நிபந்தனையை நீக்க
வேண்டும், தமிழக அரசு வெளியிடும் நிதிப் பத்திரங்களின் முதிர்வு கால அளவு 15 ஆண்டு
களாக இருக்க வேண்டும் என்ற திருத்தங்களை
மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் ‘உதய்’ திட்டத்தில் சேர தமிழக அரசு முடிவு செய்தது.
Ø 21 வது மாநிலமாக தமிழ்நாடு இணைந்த நாள் – ஜனவரி 08 – 2017.
Ø டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ்
கோயலும், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணியும் கையெழுத்திட்டனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ü இத்திட்டத்தின்கீழ், வட்டித் தொகையில் சேமிப்பு,
தொழில் நுட்பம், வணிக ரீதியான இழப்பு, மின்சாரத்தை கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பைக் குறைத்தல்.
ü பயனுள்ள வகையில் எரிசக்தி, நிலக்கரி சீர்திருத்தம் ஆகியவற்றை
மேற்கொள்ளுதல் போன்றவைகளால் தமிழகம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த நிகர பயன்களைப் பெறும்.
ü ‘உதய்’ திட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் தமிழ்நாடு
மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) 75 சதவீத கடன் தொகையான ரூ.30,420
கோடியை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்.
மீதமுள்ள கடனுக்கு தற்போதைய வட்டி விகிதத்தில் இருந்து 3 முதல்
4 சதவீதம் குறைவான சலுகை விலையில் மறுவிலை
நிர்ணயிக்கவோ அல்லது மாநில அரசு உறுதிப் பத்திரங்களை வெளியிடவோ இத்திட்டம் வழிவகை செய்கிறது.
ü கடன் குறைப்பு மற்றும் மீதமுள்ள கடன் மீதான குறைக்கப்பட்ட
வட்டி விகிதங்கள் மூலம், வருடாந்திர வட்டித் தொகையில் சுமார்
ரூ.950 கோடி அளவுக்கு சேமிக்க இயலும்.
ü தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பு மற்றும் மின்சாரத்தை
கொண்டு செல்வதில் ஏற்படும் இழப்பை முறையே 13.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் ‘டான்ஜெட்கோ’வுக்கு கூடுதலாக ரூ.1,601
கோடி வருவாய் கிடைக்கும்.
Ø தற்போது
வரை 27 மாநிலங்கள்
இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
Ø கடைசியாக
இணைந்த 27 வது மாநிலம் – மிசோரம்
Ø இத்திட்டத்தில்
இணைந்துள்ள யூனியன் பிரதேசங்கள் – அந்தமான் நிக்கோபார்
தீவுகள், தாத்ரா நாகர்ஹோலி, டாமன்-டையு, இலட்சத்தீவுகள்
(பிப்ரவரி 28 – 2018).
Ø ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்கள் இத்திட்டத்தில்
இணையவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக