ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள்
நிதி திட்டம் (Pradhan Mantri Jan
Dhan Yojana):
Ø வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்.
Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்டு 15/ 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.
Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 28/ 2014 ல் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
Ø இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத
7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது.
Ø இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும்.
Ø ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும்.
Ø ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
Ø ஆயுள் காப்பீடு தொகை
30,000 ரூபாய். கணக்கு தொடங்கிய, ஆறு மாதங்களுக்குப் பிறகு,
ஒவ்வொருவருக்கும் வரைவு தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகையை முறையாகத் திருப்பிச் செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
Ø ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இந்த கணக்கில் இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 500, மற்றும் 1000 இந்திய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது இந்த கணக்குகளில் மட்டும் 87,000
கோடி ரூபாய் சட்டவிரோதமான பணம் வைப்பு வைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
Ø 4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது காலவரையின்றி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
Ø ஜன் தன் யோஜனா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
Ø இதில், 32
கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. அவற்றில் ரூ.81 ஆயிரத்து 200 கோடி டெபாசிட் செய்யப்பட்டு
உள்ளது.
Ø கணக்கு வைத்திருப்பவர்களில் 53 சதவீதம்பேர் பெண்கள். 83 சதவீத கணக்குகள், ஆதாருடன்
இணைக்கப்பட்டு உள்ளன.
Ø வங்கி கணக்கு தொடங்குவதை
ஊக்கப்படுத்துவதற்காக, இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்த ‘ஓவர்டிராப்ட்’ வசதி, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
Ø இதில் 2000 ரூபாயை எவ்விதமான கட்டுப்பாடும், நிபந்தனையும் இல்லாமல் பெறலாம்.
Ø இந்த ஓவர்டிராப்ட் சேவை பெற அடிப்படைத் தகுதியாக இருப்பது வயது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் வயது வரம்பை 60இல் 65ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
Ø மேலும் இத்திட்டத்தில் கணக்கு துவங்குவோருக்கு RuPay டெபிட் கார்டு உடன் இணைக்கப்பட்ட விபத்து காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதுவரை காப்பீட்டு அளவு 1 லட்சமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது இதன் அளவு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக