பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PRADHAN MANTRI MUDRA
YOJANA- PMMY):
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர்
நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 8-ம் தேதி
தொடங்கி வைத்தார்.
- ரூ.10 லட்சத்துக்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்மூலம் கடன் வழங்கப்படுகிறது.
- முத்ரா திட்டம் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக்
கொள்ளவும் கடன்களை வழங்குகிறது.
1.
சிசு திட்டம் – 50000
வரை
2.
கிஷோர் திட்டம் –
50000 முதல் 5 இலட்சம் வரை
3.
தருண் திட்டம் - 5 லட்சம்
முதல் ரூ.10 லட்சம் வரை
- முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது
அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான
நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும்.
முத்ரா கடன் பெற
தேவையான தகுதிகள்:
- கடன் பெற
18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் எந்த
வங்கியிலும் வாராக் கடன் தொகையை வைத்திருக்கக்கூடாது.
- வாங்கும் கடனை
5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்.
- வங்கிகளுக்கு தகுந்தவாறு கடனுக்கான வட்டி வீதம் மாறுபடுகிறது.
- இந்த
வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும்.
முத்ரா திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற எந்தவித சொத்துபிணையம் மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை.
- கடன்
பத்து லட்சம் வரை பெறலாம்.
- ஒரு வங்கியின்
கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில்
கடன் வழங்க வேண்டும்.
- அதிகபட்சம் எத்தனை பேருக்கு
வேண்டுமானாலும் வழங்கலாம்.
- உங்கள்
தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
- அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில்
கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.
- விலைப்
பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
- இந்த
கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும்
வங்கிகள் கடன் வழங்கும்.
கடன் வழங்கும் வங்கிகள்:
-
27
பொதுத்துறை வங்கிகள்
-
17
தனியார் துறை வங்கிகள்
-
31
மண்டல கிராம வங்கிகள் (RRBs)
-
4
கூட்டுறவு வங்கிகள்
-
36
நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)
-
25
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
முத்ரா கடன் அட்டை:
- முத்ரா
கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும்.
- இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.
- இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.
முத்ரா வங்கி:
-
முத்ரா வங்கி (Micro Units Development and Refinance
Agency) (MUDRA Bank), 20,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் மறுநிதி வசதிக்கும், பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்க, 8 ஏப்ரல் 2015 அன்று இதன் முதல் கிளையை, இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
-
முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நிதியுதவி பெறலாம்.
-
தொடக்கத்தில் சிட்பி வங்கியின் (Small
Industries Development Bank of India-SIDBI) துணை அமைப்பாக முத்ரா வங்கி இயங்கும். பின்னர் தன்னாட்சி நிதி நிறுவனமாக இயங்கும்.
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில்
தமிழ்நாட்டின் தற்போதைய நிலை:
- முத்ரா திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.66 ஆயிரத்து 536 கோடி
கடன் பெற்று நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- மொத்தம் 1 கோடியே 75 லட்சத்து 77 ஆயிரத்து 176 பேர் இந்த திட்டத்தின்
மூலம் பயனடைந்துள்ளனர்.
- தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில்
மொத்தம் ரூ.64,320.62 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.59.464.35 கோடியும் கடன்அளிக்கப்பட்டுள்ளது.
முத்ரா திட்டத்தின் பயன்கள்:
- இந்தத்
திட்டம் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முன்பு இவர்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி
தொழில் நடத்தி வந்ததோடு, தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும் பங்கை வட்டிக்காக
அளித்து வந்தனர். அந்த நிலைமை மெல்ல மாறத் தொடங்கியுள்ளது.
- சிறு
மற்றும் குறு தொழில்துறையினருக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம், மக்களைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மேம்படுத்த உதவியிருப்பதுடன்,
மக்கள் வெற்றியடைவதற்கும் ஒரு வாய்ப்பை இத்திட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
- சுய வேலைவாய்ப்பு என்பது, தற்போது கவுரவமான ஒன்றாக இருப்பதுடன்,
இதுவரை முடியாது என்று கருதியிருந்த ஒன்றில் சாதனைப் படைக்கவும், முத்ரா திட்டம் உதவி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக