நடப்பு நிகழ்வுகள்
ஆகஸ்ட் 06 – 2018
v தமிழக
அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
அமைக்கப்பட்டுள்ளது.
Ø இதன்
தலைமை அதிகாரியாக குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி A.ஜாகீர் உசேன் நியமனம்.
v ஆக்சிடோசின் என்ற மருந்தை தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லரை
விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத்துறை.
v கென்
– பெட்வா, கோதாவரி – காவிரி, நர்மதை - தபதி, டாமன், கங்கை- பிஞ்சால் உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
v உலகின்
முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள மாநிலம் – ஆந்திரபிரதேசம்.
v சுற்றுலா,
வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும்
இ-விசா வசதியை 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய
சுற்றுலா துறை அமைச்சர் K.J.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
v பாம்பு
கடித்து இறந்தால் ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம் – உத்திரபிரதேசம்
v இந்தியாவின்
முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ள மாநிலம் – மணிப்பூர் (மேற்கு இம்பால்)
v ஹார்ன் நாட் ஓகே (Horn not ok – சத்தம் வேண்டாம்) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும்
சஹீர் நஹின் (சத்தம் வேண்டாம்) என்ற கைபேசி செயலியை தொடங்கியுள்ள மாநிலம் – இமாச்சலப்பிரதேசம்
v வடக்கு
இரயில்வேயின் டெல்லி கோட்டம் கொசு ஒழிப்பு சிறப்பு
இரயில் வண்டியை தொடங்கியிருக்கிறது.
v வாஷிங்க்டன்
ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றவர் – ஜெர்மனி வீரர்
அலெக்ஸ்சாண்டர் வெரேவ்
v ஒலிபரப்புதல்
வளர்ச்சிக்கான ஆசியா- பசிபிக் நிறுவனத்தின் புதிய தலைவர் – பயஸ் ஷெஹர்யார்.
v யுனைடெட்
இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளராக S.கோபகுமார் நியமனம்
v சென்னை
உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – ஹீலுவாடி ஜி
ரமேஷ்.
v உத்தரகாண்ட்
உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – ராஜிவ் சர்மா
v ஒடிசா
உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – இந்திரஜித்
மஹந்தி
v மும்பை
உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி – N.H.பட்டீல்
v ஒலியை
போல் 5 மடங்கு வேகமாக செல்லும் ஜிஞ்சாங்-2 என்ற போர்
விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு – சீனா
v உலகின்
ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்டை சீனாவின் மூலக்கூறு தாவர அறிவியலின்
சிறப்பு மையம் வடிவமைத்துள்ளது.
v சர்வதேச
மரம் அறுக்கும் போட்டியை நடத்திய நாடு – நார்வே
v தாமாக
அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோர்க்கு மரண தண்டனை வழங்கும் கடும் சட்டத்தை
கொண்டுவரவுள்ள நாடு – வங்கதேசம்
v சவுதி
அரேபியாவின் உள் விவகாரங்களில், கனடா அரசு தலையிட்டதால்
சவுதி அரேபிய அரசு கனடா அரசுடனான உறவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது.
v ராபர்ட்
எஃப் கென்னடி மனித உரிமை விருதை பெறுபவர் முன்னாள் அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா.
கருத்துகள்
கருத்துரையிடுக