முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 


6 ஆம் வகுப்பு அறிவியல்

TOP 50

IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 1

1.   பன்னாட்டு அலகு முறை:

Ø  வெப்பநிலை               - கெல்வின்

Ø  தொலைவு                 - மீட்டர்

Ø  மின்னோட்டம்        - ஆம்பியர்

Ø  காலம்               - வினாடி

Ø  பொருட்களின் அளவு  - மோல்

Ø  நிறை                - கிலோகிராம்

Ø  ஒளிச்செறிவு          - கேண்டிலா

2.   தெரிந்த ஒரு அளவை கொண்டு, தெரியாத அளவை ஒப்பிடுவது – அளவீடு

Ø  அளவீடு என்பது எண் மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளை கொண்டது.

 

    

3.   நீளத்தின் அலகுகள்:

Ø  1 சென்டி மீட்டர்            – 10 மிமீ

Ø  1 மீட்டர்                   – 100 செ.மீ

Ø  1 கிலோமீட்டர்             – 1000 மீ

Ø  10 டெசி மீட்டர்             – 1 மீ

Ø  1000 மில்லிமீட்டர்          – 1 மீ

Ø  1000000000 நானோ மீட்டர்   – 1 மீ

Ø  1மி.மீ3                     – 1 மைக்ரோலிட்டர்

Ø  1செ.மீ3                     – 1 மில்லி லிட்டர்

Ø  1மீ3                        – 1 கிலோலிட்டர்

4.   இரு சிறிய அடுத்தடுத்த பிரிவுகளுக்கு இடையே உள்ள தொலைவு –

1 மி.மீ

5.   பரப்பளவின் அலகு – மீ2

6.   பருமனின் அலகு – மீ3

7.   ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு வேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும் போது ஏற்படுவதாக தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சி – இடமாறு தோற்றப் பிழை

8.   நீளம் அடிப்படை அலகு; பருமன் என்பது வழி அலகு

9.   மனித உடலில், இரத்தத்தின் அளவு – 5 – 6 லிட்டர்

10. வாயுக்கள், தான் அடைத்து வைக்கப்பட்ட கொள்கலனின் முழு கொள்ளளவையும் அடைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

11. திடப்பொருட்களின் பருமன் SI – கனமீட்டர் அல்லது மீ3

12.   பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர்தகவில் இருக்கும்.

13.   பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். ஆனால் எடை குறையும்.

14.   நிலவில் ஈர்ப்பு விசை – புவியைபோல ஆறில் ஒரு பங்கு (1/6)

15.   பல்வேறு நிறைகள்:

Ø  1000 மில்லிகிராம்           – 1 கிராம்

Ø  1000 கிராம்                 – 1 கிலோகிராம்

Ø  100 கிலோகிராம்            – 1 குவிண்டால்

Ø  1000 கிலோகிராம்      – 1 டன்

16.   ஒரு தெரிந்த நிலையான நிறையோடு ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்த பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது – படித்தர நிறை

17.   துல்லியமான எடையை காண – மின்னணு தராசு

18.   தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி – ஓடோமீட்டர்

19.   மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790ல் யாரால் உருவாக்கப்பட்டது – பிரெஞ்சுக்காரர்கள்

20.   நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோலை கண்டுபிடித்தவர் – வில்லியம் பெட்வெல் (16 ஆம் நூற்றாண்டு)

21.   பிளாட்டினம் – இரிடியம் உலோக கலவையிலான படித்தரமீட்டர் கம்பி – பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில்

22.   தேசிய இயற்பியல் ஆய்வகம் – டெல்லி

23.   1 கிலோகிராம் என்பது பிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 ல் நிறுவப்பட்ட பிளாட்டினம்- இரிடியம் உலோக கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நிறைக்கு சமம்.

24.   ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய பயன்படும் முறை – நீர் இடப்பெயர்ச்சி முறை

25.   நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும் என்று அனுமானித்தவர் – ஆரியபட்டா

26.   பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் – விசை

27.   ஒரு பொருளின் மீது விசையானது செயல்படுத்தப்படும்போது பொருளின் வேகமும் அதன் திசையும் மாற்றமடைகிறது.

28.   இக்கமானது சுழற்சி இயக்கம், வட்டப்பாதை இயக்கம், நேர்க்கோட்டு இயக்கம் மற்றும் அலைவு இயக்கம் என 4 வகையாக பிரிக்கப்படுகிறது.

29.   பொருளானது முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் – வளைவுப்பாதை இயக்கம்

30.   ஒரு பொருள் அதன் அச்சினை மையமாக கொண்டு இயங்குவது – தற்சுழற்சி இயக்கம்

31.    ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – அலைவு இயக்கம்

32.   ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் – ஒழுங்கற்ற இயக்கம்

33.   பொருத்துக:

1.   தானாக கீழே விழும் பொருள் – நேர்க்கோட்டு இயக்கம்

2.   பந்தினை வீசுதல்              – வளைவுப்பாதை இயக்கம்

3.   கயிற்றின் ஒரு முனையில் கல்லினை கட்டிச் சுற்றுதல் – வட்டப்பாதை இயக்கம்

4.   பம்பரத்திக் இயக்கம்           – தற்சுழற்சி இயக்கம்

5.   தனி ஊசல்                   – அலைவு இயக்கம்

34.   ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கம் – கால ஒழுங்கு இயக்கம்

35.   அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும். ஆனால் அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாக காணப்படாது.

36.   சராசரி வேகத்திற்கான SI Unit – m/s

37.   கடந்த தொலைவு(d) – சராசரி வேகம்(s)×காலம்(t)

38.   உசேன் போல்ட் 100 மீ தூரத்தினை 9.58 வினாடிகளில் கடந்தார்

39.   தரையில் வாழும் விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு – சிறுத்தை – 112 கிமீ/மணி

40.   மிதிவண்டியின் இயக்கம் – தற்சுழற்சி இயக்கம், நேர்க்கோட்டு இயக்கம்

41.   ரோபாட் என்ற வார்த்தை – ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து உருவானது.

42.   ரோபாட்டுகளின் கண்களாகவும் காதுகளாகவும் உள்ளவை – மின்னணு உணர்விகள்

43.   அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம் – அலைவுறு இயக்கம்

44.   நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளை செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் – நானோ ரோபாட்டுகள்

45.   அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படுவது – எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி மற்றும் ஊடுபுழை நுட்ப எலக்ட்ரான் கருவி

46.   பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல. ஆனால், அது அண்டத்தில் கூடுதலாக காணப்படும் ஒரு பொதுவான நிலை – பிளாஸ்மா நிலை

47.   சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு – பிளாஸ்மா நிலை

48.   மிகக்குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயுநிலை போன்ற பருப்பொருள்களின் நிலை – போஸ் - ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்

49.   போஸ் - ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் 1925 ல் கணிக்கப்பட்டு 1995ல் உறுதி செய்யப்பட்டது.

50.   கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படும் நிலை – போஸ் -ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்

ஆக்கம்:

1.   செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed

2.   வே. பிரகாஷ் M.Sc, B.Ed,

3.   செ. லெனின் M.Sc, B.Ed,

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 21-07-2018

நடப்பு நிகழ்வுகள் 21-07-2018 v 8 வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டர்பன் நகர், தென்னாப்பிரிக்கா -     மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். v இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமனம். v இந்தியா ஜீன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசுபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. v புதுச்சேரி சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவினை அறிவித்துள்ளது. v மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. v 2018 நபார்டு விருதை பெற்ற வங்கி – ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம். v சாகித்திய அகாடாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை கவிஞர்களுக்கான முதல் சந்திப்பு நடைப்பெற்ற இடம் – கொல்கத்தா v சமஸ்கிருத மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ உள்ளது. v மத்திய பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு மு...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...