முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

6 ஆம் வகுப்பு அறிவியல்



    TOP 50

IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 10

1.   நீரானது ஹைட்ரனும் ஆக்சிஜனும் இணைந்து உருவானது என நிரூபித்தவர் – லவாய்சியர்

2.   வெங்காயத்தில் உள்ள வேதிபொருள் – புரோப்பேன் தயால் S – ஆக்ஸைடு

3.   துணிகள் மற்றும் நம் உடலை தூய்மைப்படுத்தப் பயன்படுபவை – சோப்புகள் மற்றும் சலவை பொருட்கள்

4.   மண்ணின் வளத்தன்மையை மேம்படுத்தி, தாவரங்கள் வளர – இயற்கை உரங்கள்

5.   எலும்பு முறிவுச் சிகிச்சையிலும் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிப்பிலும் பயன்படுபவை – பாரிஸ் சாந்து

6.   மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது – ஜிப்சம் மற்றும் எப்சம்

7.   முதன்மை ஊட்டச்சத்துக்கள் - நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

8.   கரிம உரங்கள் – மண்புழு உரம், தொழு உரம்

9.   கனிம உரங்கள் – யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்

10. உழவனின் நண்பன் – மண்புழு

11. இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளை கலந்து அரைப்பதன் மூலம் கிடைப்பது – சிமெண்ட்

12. சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குவது – ஜிப்சம்

13. 1824 ஆம் ஆண்டு சிமெண்டை முதன் முதலில் கண்டுபிடித்தவர் – வில்லியம் ஆஸ்பிடின் (இங்கிலாந்து)

14. சிமெண்ட்டும், மணலும் நீருடன் கலந்த கலவை – காரை

15. சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், நீர் சேர்ந்த கலவை – கற்காரை (கான்கிரீட்)

16. இரும்புக்கம்பிகள் அல்லது எஃகு வலைகளை கற்காரையோடு சேர்த்து பெறப்படுவது – வலுவூட்டப்பட்ட காரை

17. இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு மிருதுவான, நிறமற்ற கனிமப் பொருள் – ஜிப்சம்  - வாய்ப்பாடு – CaSO4 2H2O

18. ஜிப்சத்தின் பயன்கள்:

·         உரமாகப் பயன்படுகிறது

·         சிமெண்ட் தயாரிக்க

·         பாரீஸ் சாந்து தயாரிப்பில்

19. எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் –

வாய்ப்பாடு – MgSO4 7H2O

20. எப்சத்தின் பயன்கள்:

Ø  மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிபடுத்திகளாக

Ø  மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது.

Ø  தோல் நோய்களை தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகிறது

Ø  விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.

 

21. பாரிஸ் சாந்து என்பது ஒரு மிக நுண்ணிய வெள்ளை பொடியாகும் – கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் – மூலக்கூறு வாய்ப்பாடு – CaSO4 1/2H2O

22. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அதிகளவில் கிடைப்பதால் இது பாரிஸ் சாந்து என்பர்.

23. ஜிப்சத்தை வெப்பப்படுத்தும் பொழுது, பகுதியளவு நீர்ச்சத்து வெளியேறுவதால் தயாரிக்கப்படுவது – பாரிஸ் சாந்து

24. பாரிஸ் சாந்தின் பயன்கள்:

Ø  கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகிறது

Ø  அறுவை சிகிச்சையில் எலும்பு முறிவை சரிசெய்யப் பயன்படுகிறது.

Ø  சிலைகள் வார்ப்பதற்கு

Ø  கட்டுமானத்துறையில்

25. பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.

26. பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு – C6H5OH

27. பீனால்:

Ø  வீரியம் குறைந்த அமிலமாகும். ஆவியாகும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக திண்மம்.

Ø  பீனாலின் கரைசல் நிறமற்றதாக இருப்பினும், மாசு காரணமாக இளம் சிவப்பு நிறக் கரைசலாக மாற்றமடைகிறது.

Ø  மனிதத் தோலில்பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.

Ø  இது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கு மிகவும் அவசியமான மூலப்பொருள்

28. பீனாலின் பயன்கள்:

Ø  குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல் வாய்கொப்பளிப்பானாகவும், கிருமிநாசினியாகவும், வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.

Ø  பீனால் நுண்ணுயிரிகளை கொல்வதால், அறுவை சிகிச்சையில் கிருமிநாசியாக பயன்படுகிறது.

29. ஒட்டுப்பொருள் என்பது பசை, பிசின் போன்றவற்றை குறிக்கும் பொதுவான சொல்

30. இயற்கை ஒட்டுப்பொருள் – நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்

31. தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது கிடைப்பது – சோப்பு

32. சூழ்நிலை மண்டலத்தின் வகைகள் – 2

1.   இயற்கை சூழ்நிலை மண்டலம்

2.   செயற்கை சூழ்நிலை மண்டலம்

33. இயற்கை சூழ்நிலை மண்டலம்:

1.   நிலவாழ் சூழ்நிலை மண்டலம் – காடு

2.   நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் – குளம்

34. செயற்கை சூழ்நிலை மண்டலம்:

1.   நிலவாழ் சூழ்நிலை மண்டலம் – தோட்டம்

2.   நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் – மீன்வளர் தொட்டி

35. நீர்வாழ் காட்சியகம் - மீன்கள், பிற நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை காட்சிப்படுத்தும் இடம்

36. நிலவாழ் காட்சியகம் – நிலவாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை காட்சிப்படுத்தும் இடம் அல்லது அமைப்பு

37. தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்களை எவ்வாறு அழைப்பர் – உற்பத்தியாளர்கள்

38. உணவுச் சங்கிலி – ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணப்படுதலுக்கான வரிசைமுறை

39. புல்வெளியில் காணப்படும் உணவுச்சங்கிலி – தாவரங்கள் – மான் – புலி

40. நீர்நிலையில் காணப்படும் உணவுச்சங்கிலி – நீர்வாழ் தாவரம் – நீர்வாழ் பூச்சி – லார்வா – மீன்

41. தாவரங்களை உண்ணும் விலங்குகள் – முதல்நிலை நுகர்வோர்கள்

42. உணவு வலை - ஒரு சூழ்நிலை மண்டலத்தின் எல்லா உணவுச்சங்கிலிகளையும் ஒன்றிணைத்தால் பல்வேறு பிணைப்புகளை கொண்டுள்ள வலையமைப்பு கிடைப்பது

43.   சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய வழிமுறைகள் – 3

1.   பயன்பாட்டை குறைத்தல் (Reduce)

2.   மீண்டும் பயன்படுத்துதல் (Reuse)

3.   மறுசுழற்சி செய்தல் (Recycle)

44.   மனித உடல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் (தூக்கி எறியப்படும் மருந்தகள், நச்சுத் தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ்) – எரித்துச் சாம்பலாக்குதல்

45.   திடக்கழிவு மேலாண்மை விதிகள்(SWM – Solid Waste Management)  உருவாக்கப்பட்ட ஆண்டு – 2016

46.   இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு – 0.45 கிலோ கிராம்

47.   இந்தியா ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது.

48.   உலக நாடுகளில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவுகள்:

Ø  கென்யா                   – 0.30 கி.கி

Ø  இந்தியா                   – 0.45 கி.கி

Ø  சீனா                            – 0.63 கி.கி

Ø  ஜெர்மனி                   – 1.69 கி.கி

Ø  அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 2.58 கி.கி

49.   மண்புழு உரம் எத்தனை நாள்களில் தயாராகும் – 45 நாட்களில்

50.   மாசுபாட்டின் வகைகள் – 4

1.   காற்று மாசுபாடு

2.   நீர் மாசுபாடு

3.   நில மாசுபாடு

4.   ஒலி மாசுபாடு

ஆக்கம்:

1.   செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed

2.   வே. பிரகாஷ் M.Sc, B.Ed,

3.       செ. லெனின் M.Sc, B.Ed,

 



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 21-07-2018

நடப்பு நிகழ்வுகள் 21-07-2018 v 8 வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டர்பன் நகர், தென்னாப்பிரிக்கா -     மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். v இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமனம். v இந்தியா ஜீன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசுபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. v புதுச்சேரி சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவினை அறிவித்துள்ளது. v மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. v 2018 நபார்டு விருதை பெற்ற வங்கி – ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம். v சாகித்திய அகாடாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை கவிஞர்களுக்கான முதல் சந்திப்பு நடைப்பெற்ற இடம் – கொல்கத்தா v சமஸ்கிருத மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ உள்ளது. v மத்திய பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு மு...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...