TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 9
1.
ஒரு
பிட் என்பது 0 அல்லது 1 என்னும் ஈரடிமான எண்களை குறிக்கும்.
2.
நினைவகத்தின் அலகுகள்:
Ø
1
பைட் – 8 பிட்ஸ் (0.1)
Ø
1
கிலோ பைட்(KB) – 1024 பைட்டுகள்
Ø
1
மெகா பைட் (MB) – 1024 KB
Ø
1
ஜிகா பைட்(GB) – 1024 MB
Ø
1
டெரா பைட்(TB) – 1024 GB
Ø
1
பீட்டா பைட்(PB) – 1024 TB
Ø
1
எக்ஸா பைட்(EB) – 1024 PB
Ø
1
ஜெட்டா பைட்(ZB) – 1024 EB
Ø
1
யோட்டா பைட்(YB) – 1024 ZB
3.
கணினியின்
மையச் செயலகத்தை திரையுடன் இணைக்க பயன்படுவது – காணொளிப் பட
வரிசை (VGA)
4.
தமிழ் பெயர்கள்:
Ø
அச்சுப்பொறி
–
printer
Ø
வருடி -
scanner
Ø
விரலி -
pen drive
Ø
சுட்டி -
mouse
Ø
விசைப்பலகைகு
- keyboard
Ø
திறன்
பேசி -
smart phone
Ø
இணையப்
படக் கருவி – web camera
Ø
ஊடலை
- Blue tooth
Ø
அருகலை - Wi-Fi
5.
உயர்
வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ
ஆகியவற்றை ஒரே கேபிள் வழியாக எல்.இ.டி. தொலைகாட்சிகள், ஒளிவீழ்த்தி(projector), கணினித் திரை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க
பயன்படுவது – மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)
6.
கணினியுடன்
மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக்
கணினி ஆகியவற்றை இணைக்க பயன்படுவது – தரவு கம்பி (Date
Cable)
7.
கணினியை
ஒலிபெருக்கியுடன் இணைக்க பயன்படுவது – ஒலி வடம் (Audio Cable)
8.
மையச்செயலகம்,
கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குவது
– மின் இணைப்பு வடம் (Power Cord)
9.
ஒலிவாங்கியை
மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு பயன்படுவது – ஒலி வாங்கி இணைப்பு
வடம் (Mic)
10.
கணினியுடன்
இணையவழித் தொடர்பை ஏற்படுத்த பயன்படுவது – ஈதர் வலை
(Ethernet)
11.
இணைய
வசதியை இணைப்புவடம் இல்லாமல் பெறவும், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுவது – அருகலை (Wi-Fi)
12.
சுட்டி,
விசைப்பலகை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க
பயன்படுவது, அருகில் உள்ள தரவுகளை
பரிமாறி கொள்ளவும் உதவுவது – ஊடலை (Bluetooth)
13.
அச்சுப்பொறி
(printer),வருடி (scanner), விரலி (pen drive),சுட்டி(mouse), விசைப்பலகை
(keyboard), திறன் பேசி (smart phone), இணையப் படக் கருவி (web camera) போன்றவற்றை
கணினியுடன் இணைக்கப் பயன்படுவது – பொதுவரிசை இணைப்பு
(USB)
14.
மேக்னடைட்
என்பது – இயற்கை காந்தம்
15.
பொதுவாக பயன்படும் செயற்கை காந்தங்கள் – சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம், காந்த ஊசி
16.
காந்தத்தின்
ஈர்ப்பு விசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது, இந்த இருமுனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்.
17.
ஏறத்தால
800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களை கட்டி தொங்கவிட்ட போது அவை வடக்கு – தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வருவதை கண்டறிந்தனர்.
18.
காந்தங்களின்
எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன.
19.
கைபேசி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு
அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும். மேலும்
அந்தப் பொருள்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.
20.
மின்காந்தத்
தொடர் வண்டிக்கு வழங்கும் வேறு பெயர்கள் – மிதக்கும் தொடர்
வண்டி, பறக்கும் தொடர் வண்டி
21.
அதிவேக
தொடர்வண்டி காந்த ஈர்ப்பு மற்றும் விலக்கு விசைகளை
கொண்டு இயங்குகிறது.
22.
மின்காந்த
தொடர் வண்டி எந்தெந்த நாடுகளில் இயக்கப்படுகிறது – சீனா (501
கி.மீ), ஜப்பான் (603 கி.மீ, தென்கொரியா (421 கி.மீ)
23.
மும்பை - டெல்லி, மும்பை – நாக்பூர், சென்னை – பெங்களூரு – மைசூரு போன்ற வழித்தடங்களில் மின்காந்த தொடர்வண்டிகளை
இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசிலிக்கப்பட்டு வருகின்றன.
24.
தொடர்வண்டியின்
அடியிலும், தண்டவாளத்திலிருந்து உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன்
காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில்
அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன.
25.
மனித உடலில் உள்ள நீரின் அளவு (சராசரி):
Ø
எலும்புகள் - 22%
Ø
தோல் - 64%
Ø
கல்லீரல் - 68%
Ø
மூளை - 75%
Ø
தசைகள் - 75%
Ø
இதயம் - 79%
Ø
நுரையீரல் - 80%
Ø
மூட்டுகள் - 83%
Ø
சிறுநீரகங்கள் - 83%
Ø
நிணநீர் - 94%
26.
நமது
புவியின் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவது – நீர்
27.
புவியின்
மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் உள்ளது.
28.
புவியிலுள்ள மொத்த நீர்:
Ø
உப்பு
நீர் - 97%
Ø
சுத்தமான
நீர் - 3%
29.
புவியில் உள்ள நன்னீரின் (3%) பரவல்:
Ø
துருவ
பனிப்படிவுகள், பனியாறுகள் -
68.7%
Ø
நிலத்தடி
நீர் - 30.1%
Ø
மற்ற
நீர் ஆதாரங்கள் - 0.9%
Ø
மேற்பரப்பு
நீர் - 0.3%
30.
மொத்த மேற்பரப்பு நீரின்(0.3%) பரவல்:
Ø
ஏரிகள் - 87%
Ø
ஆறுகள் - 2%
Ø
சதுப்பு
நில நீர் - 11%
31. நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருள்
32. நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது மூன்று வகைப்படும்.
1. நன்னீர் – 0.05% முதல் 1% வரை உப்புகள் கரைந்திருக்கும்
2. உவர்ப்பு நீர் – அதிகபட்சமாக 3% வரை உப்புகள்
3. கடல் நீர் - 3% மேல் உப்புகள் கரைந்திருக்கும்.
33. கடல் நீரில் சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு போன்ற உப்புகள் கரைந்துள்ளன.
34.
உலக
நீர் தினம் – மார்ச் 22
35. நீர் சுழற்சி – சூரிய வெப்பத்தின் காரணமாக நீரானது ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கிறது. வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியானது மேகமாக மாறி பின்னர் மழையாக பொழிகிறது.
36.
நீர்
சுழற்சி எத்தனை நிலைகளை கொண்டுள்ளது – 3
1. ஆவியாதல்
2. ஆவி சுருங்குதல்
3. மழை பொழிதல்
37.
நீர்
சுழற்சியினை எவ்வாறும் அழைக்கிறோம் – ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி
38.
இயற்கை
நன்னீர் ஆதாரங்கள் – மேற்பரப்பு நீர், உறைந்த நீர், நிலத்தடி
நீர்
39. பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, 68.7% உறைந்த நிலையில் உள்ளது.
40. ஆசியாவின் முக்கிய ஆறுகளில் 10 பெரிய ஆறுகள் இமயமலையில் இருந்து தொடங்கி பாய்கின்றன.
41. காலன் என்பது நீரின் கன அளவினை அளக்கக்கூடிய அலகாகும்.
42.
ஒரு
காலன் என்பது – 3.785 லிட்டர்
43. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
44. நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்தூவரம் என்று பெயர்.
45.
நீர் பற்றாக்குறைக்கான முதன்மையான காரணங்கள்:
Ø மக்கள் தொகை பெருக்கம்
Ø சீரான மழை பொழிவின்மை
Ø நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
Ø நீர் மாசுபடுதல்
Ø நீரினை கவனக்குறைவாக கையாளுதல்
46. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக 2 முதல் 3 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
47.
சதுப்பு
நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள்
48.
தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள்:
Ø
சிதம்பரத்தினை
அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள்
Ø முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள்
Ø
சென்னையில்
உள்ள பள்ளிகரணை சதுப்பு நிலம்
Ø காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்பு நிலம்
49.
நவீன
வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் – லவாய்சியர்
50.
Elements
of Chemistry (1789) என்னும் புத்தகத்தை எழுதியவர் – லவாய்சியர்
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக