முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

6 ஆம் வகுப்பு அறிவியல்



TOP 50

IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 3

1.   தண்டையும், இலையை இணைக்கும் காம்பு பகுதி – இலை காம்பு

2.   இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்க வாட்டு வளரிகள் உள்ளன. இவை இலையடிச் செதில்கள் என்று பெயர்

3.   இலையின் அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துளைகள் – இலைத் துளைகள்

4.   இலையின் பணிகள்:

Ø  ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரிக்கிறது

Ø  சுவாசித்தலுக்கு உதவுகிறது.

Ø  இலைத்துளை வழியே நீராவிப் போக்கு நடைபெறுகிறது.

5.   நீரில் வாழும் விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரையில் வளரும். நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ கிராம் எடையோ அல்லது அதற்கு இணையான ஒருவரை தாங்கும் தன்மை கொண்டது.

6.   பூவின் அடிப்படையில் தாவரங்கள் இரு வகை. 1. பூக்கும் தாவரங்கள் எ.கா – சூரியகாந்தி 2. பூவாத் தாவரங்கள் எ.கா. ரிக்ஸியா

7.   விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். 1. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள் எ.கா மா) 2. ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள் எ.கா சைகஸ்)

8.   நீர் வாழிடம் இரு வகை 1. நன்னீர் வாழிடம் 2. கடல் நீர் வாழிடம்

9.   நன்னீர் வாழிடம்:

Ø  ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள்

Ø  ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்கள்

10. கடல் நீர் வாழிடம்:

Ø  70 சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது.

Ø  பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40 சதவீதம் கடல் வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.

Ø  கடல் பாசிகள், கடல் புற்கள், நில ஈரத் தாவரங்கள், புற்கள் மற்றும் தாவர மிதவைகள்

11. உலகின் மிக நீளமான நதி – நைல் நதி - 6,650 கி.மீ

12. இந்தியாவின் மின நீளமான நதி – கங்கை நதி - 2,525 கி.மீ

13. தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன.

14. நில வாழிடங்கள் 3 வகைப்படும். 1. காடுகள் 2. புல்வெளிகள் 3. பாலைவனங்கள் – இரப்பர் மரம், தேக்கு மரம் மற்றும் வேம்பு

15. உலகில் எத்தனை சதவீதம் நில வாழிடங்கள் உள்ளன – 28 சதவீதம்

16.   470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் - மாஸ்கள், லிவர்வோர்ட்ஸ்

17.   உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் பாதியை கொடுப்பது – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலை காடுகள்

 

 

18.   பாலைவன வாழிடம்:

Ø  நீரின் அளவ மிகக் குறைவாக உள்ள இடம்

Ø  பூமியின் மிக வறண்ட பகுதி

Ø  ஆண்டின் சராசரி மழை 25 செ.மீக்கும் குறைவு

Ø  பூமியில் 20 சதவீதம் பாலைவனம் உள்ளன.

Ø  சப்பாத்திக் கள்ளி, அகேவ், சோற்றுக் கற்றாழை, பிரையோபில்லம்

19.   பாலைவனத்தின் வகைகள் – 4

1.   வெப்ப, வறட்சிப் பாலைவனங்கள்

2.   மித வெப்ப பாலைவனங்கள்

3.   கடல் சார்ந்த பாலைவனங்கள்

4.   குளிர் பாலைவனங்கள்

20.   தார் பாலைவனம் – இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது.

Ø  இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும், சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் விரிந்துள்ளது.

21.   புல்வெளி வாழிடம்:

Ø  அதிகமான புற்கள் காணப்படும்

Ø  மிகச் சிறியன முதல் உயரமான புற்களை கொண்டதாக இருக்கும்

22.   உலக வாழிட நாள் – அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை

23.   பற்று கம்பி (ஏறு கொடிகள்) - பட்டாணி, பாகற்காய்

24.   இனிப்பு பட்டாணி(லத்திரஸ்) – சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறியுள்ளன

25.   பாகற்காய் – கோணமொட்டு பற்று கம்பிகளாக மாற்றம் அடைந்து அவைகள் மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.

26.   பின்னு கொடி – சங்குப் பூ, மல்லிகை

27.   வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம் – மூங்கில்

28.   முட்கள் – அகேவ் (ரயில் கற்றாழை), சப்பாத்திக் கள்ளி(ஒப்பன்ஷியா), காகிதப் பூ(போகன்வில்லியா) 

29.   இலையின் மூன்று முக்கிய பணிகள் – 1. ஒளிச்சேர்க்கை 2. சுவாசம் 3. நீராவிப் போக்கு

30.   இலைத்துளையின் முக்கிய வேலை – நீராவிப் போக்கு

31.   நீரை உறிஞ்சும் பகுதி – வேர்

32.   குளம் நன்னீர் வாழிடத்திற்கு உதாரணம்

33.   ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி – இலை

34.   பொருத்துக:

1.   மலைகள்               – இமயமலை

2.   பாலைவனம்            – வறண்ட இடங்கள்

3.   தண்டு                  – கிளைகள்

4.   ஒளிச்சேர்க்கை          – இலைகள்

5.   சல்லிவேர்த் தொகுப்பு    – ஒரு வித்திலை தாவரங்கள்

35.   ஒரு செல் கொண்டவை - பாரமீசியம், அமீபா, யூக்ளினா

36.   பல செல் கொண்டவை - புலி, மனிதன், குருங்கு, மண் புழு, நத்தை, தவளை, மீன் மற்றும் புறா

37.   நீரில் மட்டுமே வாழ்பவை - மீன்கள், நண்டுகள்

38.   உயிரினத்தின் மிகச் சிறிய செயல்படும் அலகு – செல்கள்

39.   ஜீராங் பறவைகள் பூங்கா – சிங்கப்பூர் – பென்குவின் பறவைகள் பனிக்கட்டிகள் நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடி கூண்டுகளில் 00C வெப்பநிலை அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன

40.   அமீபா:

Ø  ஒரு செல் உயிரி

Ø  நீரில் இருந்து உணவை விழுங்குகின்றன

Ø  சுருங்கும் நுண் குமிழ்கள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகின்றன

Ø  எளிய பரவல் மூலம் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது.

Ø  போலிக் கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன

41.   பாரமீசியம் குறு இழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன

42.   யூக்ளினா கசையிழையின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன

43.   மீனின் சுவாச உறுப்பு – செவுள்கள் – ஆக்ஸிஜனை உறிஞ்ச பயன்படுகிறது.

44.   பல்லிகள் பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் வாழக் கூடியவை

45.   இரு கால்களில் ஓடும் பல்லியின் வாலானது அதன் முழு உடல் எடையை தாங்கும் வகையில் பின்நோக்கி இருக்கும் அல்லது மேல் நோக்கி இருக்கும்.

46.   பல்லிகள் நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

47.   சில பல்லிகளுக்கு (டயனோசார்) கால்களில் விரலிடைச் சவ்வுகள் உள்ளன. சில பல்லிகள் பறக்கும் தன்மையும், பாதுகாப்புடன் தரையிறங்கக் கூடிய தன்மையும் பெற்றுள்ளன.

48.   பறவையின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.

49.   பறவையின் வால் பறக்கும் திசையை கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின் போது ஏற்படும் அழுத்தத்தினை தாங்குவதற்கு வலிமை மிக்க மார்பு தசையினை பெற்றுள்ளன.

50.   பறவைகள் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை காண முடியும். இதற்கு இருமை பார்வை என்று பெயர்.

ஆக்கம்:

1.   செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed

2.   வே. பிரகாஷ் M.Sc, B.Ed,

3.   செ. லெனின் M.Sc, B.Ed,

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 21-07-2018

நடப்பு நிகழ்வுகள் 21-07-2018 v 8 வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற்ற இடம் – டர்பன் நகர், தென்னாப்பிரிக்கா -     மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். v இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமனம். v இந்தியா ஜீன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசுபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. v புதுச்சேரி சுற்றுலாத்துறை தனது முதல் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவினை அறிவித்துள்ளது. v மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை புறநகர் ரயில்வே நிலையத்தினை பிரபாவதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. v 2018 நபார்டு விருதை பெற்ற வங்கி – ரெப்கோ மைக்ரோ நிதி நிறுவனம். v சாகித்திய அகாடாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் முதல் திருநங்கை கவிஞர்களுக்கான முதல் சந்திப்பு நடைப்பெற்ற இடம் – கொல்கத்தா v சமஸ்கிருத மொழியினை மேம்படுத்துவதற்காக குஜராத் அரசு சமஸ்கிருத பாஷா விகாஸ் கழகத்தினை நிறுவ உள்ளது. v மத்திய பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு மு...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...