
TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 5
1.
முதன் முதலில் கணக்கிட பயன்படுத்திய கருவி – அபாகஸ் கருவி
2.
நாம் தற்போது பயன்படுத்துவது எத்தனையாவது தலைமுறை
கணினி – ஐந்தாம்
தலைமுறை கணினி
3.
முதலாம் தலைமுறை கணினி – வெற்றிடக் குழாய்கள்
4.
இரண்டாம் தலைமுறை கணினி – மின்மயப் பெருக்கி
5.
மூன்றாம் தலைமுறை கணினி – ஒருங்கிணைந்த சுற்று
6.
நான்காம் தலைமுறை கணினி – நுண் செயலி
7.
ஐந்தாம் தலைமுறை கணினி – செயற்கை நுண்ணறிவு
8.
தரவு என்பது – முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள். பொதுவாக
இவை நேரடியாக நமக்கு பயன் தராது. பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.
9.
தகவல் என்பது நமக்கு நேரடியாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுவது.
தரவுகளில் இருந்து பெறப்படுபவை, தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட விவரங்கள் தான் தகவல்
10.
கணினியில் நாம் செய்யக் கூடிய வேலைகளுக்கு உதவக்கூடிய
கட்டளைகள் அல்லது நிரல்களின் தொகுப்புதான் – மென்பொருள்
11.
மென்பொருள் இரண்டு வகைப்படும்.
1. இயக்க
மென்பொருள்
2. பயன்பாட்டு
மென்பொருள்
12.
கணினியை இயக்குவதற்கு உதவும் மென்பொருள் – இயக்க மென்பொருள்
13.
ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள பயன்படுத்தப்படும்
மென்பொருள் – பயன்பாட்டு
மென்பொருள்
14.
கணினியில் இருக்கக் கூடிய மென்பொருள்கள் செயல்படுவதற்கு
உதவக்கூடிய கணினியின் பாகங்கள் – வன்பொருட்கள்
15.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் – சார்லஸ் பாபேஜ்
16.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1946
17.
உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி – Analog Computer
18.
குறியீட்டு எண்களை பயன்படுத்திக் கணக்கிடும் கருவி
– அபாகஸ் கருவி
19.
ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க
ஆற்றலை எவ்வாறு அழைப்பர் – வெப்பம்
20.
வெப்பத்தின் SI அலகு – ஜீல் (கலோரி என்ற அலகும் பயன்படுத்தப்படுகிறது)
21.
வெப்பநிலையை துல்லியமாக கணக்கிட பயன்படும் கருவி
– வெப்பநிலைமானி
22.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக
உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு ------------------- என்று பெயர் – வெப்பநிலை
23.
வெப்பநிலையின் SI அலகு – கெல்வின் ( பிற
அலகுகள் – செல்சியஸ், பாரன்ஹீட்)
24.
எந்த வெப்பநிலையில் நீர் கொதிக்கத் துவங்கி, வெப்பநிலை
நிலையாக இருக்கிறதோ அந்த வெப்பநிலைக்குத்தான் நீரின் கொதிநிலை என்று பெயர்.
25.
சாதாரணமாக அறைவெப்பநிலையில் உள்ள நீரின் வெப்பநிலை
– 300C
26.
ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில், 1922 ஆம் ஆண்டில்
ஒரு நாள், காற்றின் வெப்பநிலையானது 590C எனக் கணிக்கப்பட்டுள்ளது.
27.
அண்டார்டிக் கண்டத்தின் வெப்பநிலைதான் உலகிலேயே
மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்பட்டுள்ளது - -890C
28.
நமது உடலின் சராசரி வெப்பநிலை - 370C
29.
காற்றின் வெப்பநிலை 150C முதல் 200C
அளவில் இருக்கும்பொழுது நமது உடல் குளிர்ச்சியாக உணர்கிறது.
30.
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட்
உயர்த்தப் பயன்படும் வெப்ப அளவு – ஒரு கலோரி
31.
வெப்பத்தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும்
சமமாக இருந்தால் அது வெப்பச் சமநிலை என்பர்.
32.
பொருள்கள் வெப்பப்படுத்தும் பொழுது விரிவடைந்து குளிர்விக்கும்
பொழுது சுருக்கமடைகின்றன.
33.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அது விரிவடைவதை
அப்பொருளின் வெப்ப
விரிவடைதல் என்கிறோம்.
34.
வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு
நீள்விரிவு என்றும்,
பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு பருமவிரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
35.
சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப்
பொருள்கள் போரோசிலிகேட்
கண்ணாடியால்( பைரக்ஸ் கண்ணாடி) உருவாக்கப்படுகின்றன.
36.
வெப்பத்தை அரிதிற் கடத்தும் பொருள் – கண்ணாடி
37.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
– வேகமாக நகரத்
தொடங்கும்.
38.
தமிழகத்தில் அதிக அளவு பழுப்பு நிலக்கரி கிடைக்கும்
இடம் – நெய்வேலி
39.
பொருத்துக:
1. கடலூர்
– நெய்வேலி அனல்
மின்நிலையம்
2. திருவள்ளூர்
– எண்ணூர் அனல்
மின்நிலையம்
3. கன்னியாகுமரி
– ஆரல்வாய்மொழி
4. திருநெல்வேலி
– கயத்தாறு
40.
வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஒரு கருவி –
மின்கலன்
41.
முதன்மை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம்
செய்ய இயலாது. இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும். எ.கா. சுவர் கடிகாரம், கைக் கடிகாரம்
மற்றும் ரோபோ பொம்மைகள்
42.
துணை மின்கலன் என்பது பலமுறை மின்னேற்றம் செய்து
தொடர்ந்து பயன்படுத்தக்கூடியது. எ.கா. கைபேசிகள், மடிக்கணினிகள், அவசர கால விளக்குகள் மற்றும் வாகனங்கள்
43.
மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர் முனைக்கு
மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை – மின்சுற்று
44.
மின்சுற்றின் வகைகள் – 3
1. எளிய மின்சுற்று
2. தொடரிணைப்பு
3. பக்க இணைப்பு
45.
வீடுகளில் பயன்படுத்தப்படும் இணைப்பு – பக்க இணைப்பு
46.
மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் – ஈல் மீன்
47.
ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும்
கருவி – அம்மீட்டர்
48.
மின்சுற்றில் அம்மீட்டர் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்
– தொடரிணைப்பாக
49.
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதம் – மின்னோட்டம்
50.
பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கின்றவற்றை
எவ்வாறு அழைப்பர் – மின் கடத்திகள்
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக