TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 8
1. சுவாச மண்டலத்தின் மூலம் நடைபெறும் வாயுக்களின் பரிமாற்றம் மூன்று வேறுபட்ட செயல் நிலைகளை கொண்டது. அவை
1. வெளிசுவாசம்
2. உட்சுவாசம்
3. செல்சுவாசம்
2. வெளிசுவாசம் – நாசித்துவாரங்களின் வழியாக காற்றிலுள்ள ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, நுரையீரல்களில் உள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.
3. செல்சுவாசம் – செல்கள் வழியாக ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் – டை – ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.
4. உட்சுவாசம் – இரத்த ஓட்ட மண்டலம் வழியாக ஆக்ஸிஜன் உடல் முழுவதும் அளிக்கப்பட்டு அங்குள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு எடுத்து செல்லப்படுகிறது. இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் – டை – ஆக்ஸைடு கடத்தப்படுகிறது.
5. நாம் சுவாசிக்கும் போது காற்று எங்கே செல்லுகிறது –
நாசித்துவாரங்கள்
– நாசிக்குழி – தொண்டை – லாரிங்ஸ் – மூச்சுக்குழல் – முதல் நிலை கிளை மூச்சுக்குழல்
– நுண்குழல் கிளை மூச்சு – ஆல்வியோலஸ்
6.
மனிதனின்
ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள்
உள்ளன.
7.
கொட்டாவி
விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி
அதிக அளவு கார்பன் – டை – ஆக்ஸைடை வெளியிடுகிறோம்.
8.
இரத்த
ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக்குழாய்கள், இரத்தம்
ஆகியவற்றை கொண்டது.
9.
இதயம்
மார்பறையில், இரண்டு நுரையீரல்களுக்கு இடையே அமைந்துள்ளது.
10. நமது இதயம் நான்கு
அறைகளை கொண்டுள்ளது.
11.
இதயத்தை
பாதுகாக்கும் உறை – பெரிகார்டியம்
12. நமது உடலில் மூன்று
வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன.
1.
தமனிகள்
2. சிரைகள் 3. தந்துகிகள்
13. இரத்தம் பிளாஸ்மா
மற்றும் இரத்த அணுக்களை கொண்டுள்ளது.
14. இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.
1.
இரத்த
சிவப்பணுக்கள்
2.
இரத்த
வெள்ளையணுக்கள்
3.
இரத்த
தட்டுக்கள்
15. இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன.
16.
சாதாரணமாக
ஓய்வு நிலையில் உள்ள ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில் 72 – 80 வரை உள்ளது.
17.
உடலின்
அனைத்துப் பகுதிகளுக்கும் குருதியை உந்தி தள்ளுவது – இதயம்
18.
வலது
வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்து செல்வது – நுரையீரல் தமனி
19.
நுரையீரலிலிருந்து
இரத்தத்தை இடது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்வது – நுரையீரல்
சிரை
20.
ஆக்சிஜன்
மற்றும் சீரணித்த சத்து உணவுப்பொருள்களை மற்ற உறுப்புகளுக்கு அளித்து அங்கிருந்து கழிவு
பொருள்களை ஏற்றுக்கொண்டு கடத்துபவை – குருதி நுண் நாளங்கள்
21.
இதயத்திலிருந்து
உடலின் அனைத்து பகுதிகளுக்கும் குருதியை எடுத்து செல்பவை – தமனிகள் – வெளிர் சிவப்பு நிறத்தில்
22. நுரையீரல் தமனி அசுத்த இரத்தத்தை எடுத்து செல்கிறது.
23.
சிரைகள்:
®
கருஞ்சிவப்பு
நிறத்தில் காணப்படும்
®
உடலின்
பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு வருகின்றன.
®
அனைத்து
சிரைகளும் அசுத்த இரத்தத்தினை கடத்துகின்றன.
24. நுரையீரல் சிரை – சுத்தமான இரத்தத்தை கடத்துகின்றன.
25. நரம்பு மண்டலம் – நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால்
ஆனது.
26. நரம்பு மண்டலமும், நாளமில்லா சுரப்பி மண்டலமும்
இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை
செய்கிறது.
27.
மூளை:
v
மண்டையோட்டின்
கபால குழியினுள் உள்ளது.
v
மூன்று
உறைகளால் சூழப்பட்டு உள்ளது.
v
மூளையை
மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்
1.
முன்
மூளை 2. நடுமூளை 3. பின் மூளை
28. மூளையில் நூறு
மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும்.
29.
வெளி
உலகின் சாளரங்கள் – உணர் உறுப்புகள்
30. கண் மூன்று
முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
1.
கார்னியா
2.
ஐரிஸ்
3.
கண்மணி
(பியூப்பில்)
31. செவியானது மூன்று
பகுதிகளை கொண்டுள்ளது
1.
புறச்செவி
2.
நடுச்செவி
3.
உட்செவி
32.
மனிதனின்
புறச் செவியில் உள்ள மடல் – புறச் செவி மடல்
33.
பிட்யூட்டரி
சுரப்பி – மூளையின் அடிப்பகுதி
34.
பீனியல்
சுரப்பி – மூளையின் அடிப்பகுதி
35.
தைராய்டு
சுரப்பி – கழுத்து
36.
தைமஸ்
சுரப்பி – மார்புக்கூடு
37.
கணையம்
– வயிற்றின் அடிப்பகுதி
38.
அட்ரீனல்
சுரப்பி – சிறு நீரகத்தின் மேல்
39.
இனப்பெருக்க
உறுப்புகள் – இடுப்புக் குழி
40.
சிறுநீரகத்தின்
செயல் அடிப்படை அலகு – நெப்ரான்
41.
இரத்தத்தினை
வடிகட்டி சிறுநீரை உருவாக்குவது – சிறுநீரகம்
42. நமது உடலில் 70
சதவீதம் நீர் உள்ளது.
43. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் 85 சதவீதம் நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் 15 சதவீதம் நீர் உள்ளது.
44. நாம் உணவின் மூலமாகவும், நீர் மூலமாகவும்
ஒரு நாளைக்கு 1.5 முதல் 3.5 லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்.
45.
கணினியின்
முக்கிய பாகங்கள் எத்தனை – 3
1.
உள்ளீட்டகம்
2.
மையச்செயலகம்
3.
வெளியீட்டகம்
46. குறுவட்டில்(CD) சேமிக்கும் தகவல்களை விட, 6 மடங்கு அதிகமாக DVD தட்டில் சேமிக்க முடியும்.
47. உள்ளீட்டு கருவிகள் - விசைப்பலகை, சுட்டி, வருடி, பட்டை குறியீடு
படிப்பான், ஒலிவாங்கி, இணையப் படக்கருவி, ஒளி பேனா
48. வெளியீட்டு கருவிகள் - அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, வரைவி
49.
கணினி
திரைகளின் வகைகள் எத்தனை – 2
1.
CRT
திரை(Cathode Ray Tube)
2.
TFT
திரை(Thin Film Transistor)
50. தரவுகள் பிட்
என்ற அலகால் அளவிடப்படுகின்றன.
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக