TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 6
1.
அரிதிற் கடத்திகளுக்கு எ.கா தருக – பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர்,
பீங்கான், எபோனைட்
2.
தாமஸ் ஆல்வா எடிசன் காலம் – பிப்ரவரி 11, 1847 – அக்டோபர்
18, 1931 – அமெரிக்க கண்டுபிடிப்பாளர்
3.
டைனமோவை கண்டறிந்தவர் – மைக்கல் பாரடே(1791-1867)
4.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் – மின்கலன்
5.
மெதுவான மாற்றங்கள் – நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை
மாற்றம், விதை முளைத்தல்
6.
வேகமான மாற்றங்கள் – பலூன் வெடித்தல், கண்ணாடி உடைதல்,
பட்டாசு வெடித்தல், காகிதம் தயாரித்தல்
7. மீள் மாற்றம் – சில
மாற்றங்கள் நிகழும் போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்கு திரும்ப
மாறுதல்
எ.கா- தொட்டால் சிணுங்கி தாவரம், ரப்பர் வளையம் நீளுதல், பனிக்கட்டி உருகுதல்
8. மீளா மாற்றம் – சில
மாற்றங்கள் நிகழும் போது மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்கு திரும்ப
முடியாது.
எ.கா – பால் தயிராக மாறுதல், உணவு செரித்தல், மாவிலிருந்து இட்லி தயாரித்தல்
9.
இயற்பியல் மாற்றங்கள் – ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல்
பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது. எ.கா- பனிக்கட்டி உருகுதல், உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குதல்,
இரப்பர் வளையத்தினை இழுத்தல்
10.
பனிகட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் – உருகுதல்
11.
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் – ஆவியாதல்
12.
நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் – ஆவி சுருங்குதல்
13.
நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் – உறைதல்
14.
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவமாகாமல்
நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது – பதங்கமாதல் எ.கா- கற்பூரம்
15.
திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு,
நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை – கரைதல்
16.
கரைபொருளை கரைக்கக்கூடிய பொருள் – கரைப்பான்
17.
கரைப்பானில் கரையக்கூடிய பொருள் – கரைபொருள்
18.
கரைபொருள்+கரைப்பான் – கரைசல்
19. நீர் ஒரு பொது
கரைப்பான்
20. வேதியியல் மாற்றங்கள் – பொருள்களின்
வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேதியியல் மாற்றங்கள் எனப்படும்.
Ø வேதியியல்
மாற்றங்கள் புதிய பொருள்களை உண்டாக்குகின்றன.
Ø மரம் எரிதல்,
சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல் மற்றும் இரும்பு துருப்பிடித்தல்
21.
|
இயற்பியல் மாற்றங்கள் |
வேதியியல் மாற்றங்கள் |
|
புதிய பொருள்கள் உருவாவதில்லை |
புதிய பொருள்கள் உருவாகின்றன |
|
வேதி இயைபில் மாற்றம் ஏற்படாது |
வேதி இயைபில் மாற்றம் ஏற்படும் |
|
இது ஒரு தற்காலிக மாற்றம் |
நிரந்தர மாற்றம் |
|
இது ஒரு மீள்வினை |
மீளா வினை |
22. விரும்பத்தக்க மாற்றங்கள் – சுற்றுசூழலுக்குப்
பயன்தரும் அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்காத நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள். எ.கா
– காய் கனியாதல், பருவ நிலை மாற்றம், தாவரங்கள் வளர்தல், உணவு சமைத்தல், பால் தயிராதல்
23. விரும்பத்தகாத மாற்றங்கள் – காடுகள்
அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்
24. இயற்கையான மாற்றங்கள் – புவியின்
சுழற்சி, மழை பெய்தல், அமாவாசை முதல் பெளர்ணமி வரை நிலவின் வெவ்வேறு நிலைகள்
25. மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
அல்லது செயற்கையான மாற்றங்கள் - சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடங்கள்
கட்டுதல்
26.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்
– நிலைமாற்றம்
27.
வளிமண்டலத்தின் அடுக்குகள் எத்தனை – 5
1. அடிவளி
மண்டலம்(troposphere) – வானிலை மாறுபாடு
2. அடுக்குவளி
மண்டலம்(Stratosphere) – ஓசோன் படலம்
3. இடைவளி
மண்டலம்(Mesosphere) – விண்கற்கள் எரிதல்
4. அயனி மண்டலம்(Ionosphere)
5. புறவளி
மண்டலம்(Exosphere) – குறைந்த வெப்பநிலை
28.
வளிமண்டலத்தில் காற்று – 21 சதவீதம்; நைட்ரஜன் – 78 சதவீதம்,
கார்பன்-டைஆக்சைடு,நீராவி, தூசு – 1 சதவீதம்
29. வளிமண்டலம் என்பது – பூமியானது
காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. புவிப்பரப்பிலிருந்து 800 கி.மீ
வரை புவியின் ஈர்ப்புவிசையால் பூமியின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தப்படுகிறது.
30. காற்றின்
பரவலானது புவிக்கு
அருகில் மிக அதிகமாகவும், மேலே செல்லச்செல்லக் குறைவாகவும் காணப்படும்.
31.
அடிவளி மண்டலம்:
Ø பூமிக்கு
அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு
Ø புவி மேற்பரப்பிலிருந்து
16 கி.மீ உயரம் வரையிலான அடுக்கு
Ø காற்றின்
இயக்கம் இந்த அடுக்கில்தான் நடைபெறும்.
Ø இவ்வடிக்கில்
உள்ள நீராவிதான் மேகங்கள் உருவாக காரணமாக இருக்கிறது.
Ø பூமியில்
நிகழும் அனைத்து வானிலைக்கும் காரணமான அடுக்கு
32.
அடுக்குவளி மண்டலம்:
Ø அடிவளி
மண்டலத்துக்கு மேல் அமைந்துள்ளது.
Ø இந்த அடுக்கில்தான்
ஓசோன் படலம் உள்ளது.
Ø ஓசோன்
படலமானது சூரியனிலிருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியில்
உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கிறது.
33. 18 ஆம்
நூற்றாண்டு வரையிலும், மனிதர்கள் காற்றினை பருப்பொருளில் அடங்கியுள்ள ஒரே வகையான அடிப்படைத்துகள்கள்
என்றே நினைத்து இருந்தனர்.
34.
காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல; ஆனால்
அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்பதனை சோதனை மூலம் நிரூபித்தவர் – ஜோசப் பிரிஸ்ட்லி (1774)
35.
காற்றிற்கு ஆக்சிஜன் என்று பெயரிட்டவர் – பிரெஞ்சு
வேதியியலாளர் லவாய்சியர்
36.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு சூரியஒளி
தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தவர் – ஜான் இன்ஜென்ஹவுஸ் (1730 முதல் 1799 வரை)
37.
சுவாசிக்கும் சுண்டெலியாலும், எரியும் மெழுகுவர்த்தியாலும்
கார்பன்-டைஆக்சைடு வெளியிடப்பட்டு மாசடையும் காற்றினை, தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிந்து,
ஆக்சிஜனை வெளியிட்டு, தூய்மைப்படுத்துகிறது என்பதை நிரூபித்தவர் – ஜான் இன்ஜென்ஹவுஸ்
38.
நைட்ரஜனை கண்டறிந்தவர் – டேனியல் ரூதர்போர்டு
39.
எரியும் மெழுகுவர்த்தியினை உள்ளடக்கிய மணிஜாடியினை
பயன்படுத்தி காற்றிலுள்ள ஆக்சிஜனை கார்பன்-டை – ஆக்சைடாக மாற்றி பின் அந்த காற்றினை
சுண்ணாம்பு நீரில் செலுத்தி அதிலுள்ள கார்பன்-டை – ஆக்சைடு வாயுவினையும் முற்றிலும்
நீக்கியவர் – டேனியல்
ரூதர்போர்டு (ஸ்காட்லாந்து)
40.
நைட்டரிலிருந்து பெறப்பட்ட நைட்ரஜன் வாயுவின் பண்பினை
ஒத்திருந்ததை கண்டறிந்து அதற்கு நைட்ரஜன் என பெயரிட்டவர் – டேனியல் ரூதர்போர்டு
41.
காற்றின் இயைபு;
Ø காற்றின்
பெரும்பகுதி நைட்ரஜன் (4/5) – 78 சதவீதம்
Ø இரண்டாவது
பெரும்பகுதி ஆக்சிஜன் (1/5) – 21 சதவீதம்
Ø கார்பன்
– டை - ஆக்சைடு, ஆர்கான், நீராவி மற்றும் பிற வாயுக்கள் – 1 சதவீதம்
42. வளிமண்டலத்தின்
உயர் அடுக்குகளில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும்போது,
எரிபொருளுடன் ஆக்சிஜனையும் சேர்த்தே செலுத்துகிறோம்.
43. ஆக்சிஜன்
முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிபடுத்தும்
நிகழ்வு – ஒளிர்தல்
44.
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு –
உள்ளெரிதல்
45. தாவரங்கள்
வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும் வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற
மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது.
46. தாவரங்கள்
அவற்றிற்கான உணவினை
ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்கின்றன.
47.
ஒளிச்சேர்க்கையின் பொழுது சூரிய ஒளியினை உறிஞ்ச
பயன்படுவது – பச்சையம்
48.
ஒளிச்சேர்க்கைக்கான சமன்பாடு:
கார்பன் – டை – ஆக்சைடு + நீர் சூரியஒளி உணவு + ஆக்சிஜன்
பச்சையம்
49.
செரிக்கப்பட்ட உணவுப் பொருளுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து,
கார்பன் – டை - ஆக்சைடு, நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்வு – சுவாசம்
50.
உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றின் இயைபுகள்:
|
பகுதிப் பொருட்கள் |
உள்ளிழுக்கும் காற்று |
வெளியேற்றும் காற்று |
|
நைட்ரஜன் |
78% |
78% |
|
ஆக்சிஜன் |
21% |
16% |
|
கார்பன்
– டை – ஆக்சைடு |
0.03% |
4% |
|
நீராவி |
மாறுபடும்
அளவு |
கூடுதலாக
வெளியேறும் |
|
மந்த
வாயுக்கள் |
0.95% |
0.95% |
|
தூசு |
மாறுபடும்
அளவு |
இல்லை |
|
வெப்பநிலை |
அறை
வெப்பநிலை |
உடல்
வெப்பநிலை |
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக