TOP 50
IMPORTANT QUESTIONS AND ANSWERS – PART 2
1.
இந்தியாவின்
கானடா என்ற தத்துவமேதையும் கிரேக்க தத்துவமேதை
டெமாக்ரட்டிஸ்சும் பருப்பொருள் பற்றிய ஒத்த கருத்துக்களை
கூறினர்.
2.
நம்மால்
முடிவற்ற நிலைக்குப் போக முடியாது என்பது இல்லை. நூலை மேலும் மிகச் சிறிதாக வெட்ட முடியாத
அளவிற்கு ஒன்று உள்ளது எனில், அதுவே மூலக்கூறுகள் அல்லது அணுக்களாக அமையும் என்று கூறியவர்கள்
– கானடா மற்றும் டெமாக்ரட்டிஸ்
3.
ஒரு
துளி நீரில் ஏறக்குறைய 1021 நீர் துகள்கள்
அடங்கியுள்ளது.
4.
எளிதில்
பாயும் தன்மையுள்ள பொருட்கள் – வாயுக்கள்
5.
திரவங்கள்
புவி ஈர்ப்பு விளைவினால் அதிகம் ஈர்க்கப்படுகிறது.
6.
விரவுதல்
என்பது கிடைக்கும் இடத்தை நிரப்பப் பரவும் துகள்களின்
தன்மை ஆகும்.
7.
வாயுக்கள்
நீர்மமாக மாற்றப்படுவதற்கு வாயுக்கள் நீர்மமாதல் என்று
பெயர்.
8.
வாயு
மூலக்கூறுகள் அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலையில்
மூலக்கூறுகள் நெருக்கமாக அமைந்து, ஆற்றல் குறைக்கப்பட்டு வாயுக்கள் நீர்மமாக
மாற்றப்படுகிறது.
9.
ஒரு
தூய பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது.
10. தூய பொருள்கள் தனிமங்களாகவோ
அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம்.
11.
ஒரு
தனிமம் என்பது சிறிய துகள்களாலான அணுக்களால் ஆனது.
12. ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும்.
13. ஒரு சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல்
சேர்க்கையாகும்.
14. தங்கத்தின் தூய்மை காரட் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. 24 காரட் தங்கம்
என்பது தூய நிலையில் உள்ள தங்கமாகும்.
15. ஒர கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களை கொண்ட தூய்மையற்ற பொருளாகும்.
கலவையின் பகுதிப் பொருட்கள் எந்த விகிதத்திலும் கலக்கப்பட்டு இருக்கும்.
16.
ஒரு
கலவையில் இருந்து அவற்றின் பல பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரித்து எடுக்கும் முறை
– பிரித்தெடுத்தல்
17.
வெவ்வேறு
அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறைக்கு – சலித்தல்
என்று பெயர்.
18.
துணி
துவைக்கும் எந்திரத்தில் பயன்படும் விசை – மைய விலக்கு
விசை
19.
அரிசியில்
இருந்து நீக்கப்பட்ட உமி கட்டுமான பொருளாகவும், உரமாகவும்,
மின்காப்புப் பொருளாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது.
20.
நீரைச்
சேர்க்கும் பொழுது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும், எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள்
நீரில் மூழ்கி அடியில் தங்கும் இம்முறைக்கு – வண்டலாக்குதல்
என்று பெயர்.
21.
ஒரு
கலவையில் கனமான பொருட்கள் இருப்பின் அவற்றை சிறிது நேரம் அசையாமல் வைக்கும் பொழுது
எடை அதிகமான பொருட்கள் வண்டலாகத் தங்கி, மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும். இம்முறைக்கு
படியவைத்தல் என்று பெயர்.
22.
அடியில்
தங்கும் பகுதி வண்டல் என்றும், தெளிந்த நிலையில்
உள்ள பகுதி தெளிந்த நீர் என்றும் அழைப்பர்.
23.
ஒரு
கலவையில் உள்ள களிமண், மணல் போன்ற கரையாத பொருள்களை வடிதாளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கும்
முறை – வடிகட்டுதல்
24. நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையினை
பிரிப்பதற்கு படிய வைத்தல், தெளியவைத்து இறுத்தல், வடிகட்டுதல்,
ஆவியாக்குதல் மற்றும் குளிரவைத்தல் போன்ற பல முறைகளை வெவ்வேறு படி நிலைகளில்
நிகழ்த்த வேண்டும்.
25. எதிர் சவ்வூடு பரவல் என்ற முறையில் குடிப்பதற்கென நீரில் உள்ள
மாசுக்கள் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது.
26.
காந்தத்தன்மை
கொண்ட பொருள்களை காந்தத்தன்மையற்ற பொருள்களிலிருந்து பிரிக்கும் முறை – காந்தப் பிரிப்பு முறை
27.
படிய
வைத்து வண்டலைப் பாதிக்காத வண்ணம் தெளிந்த நீரை வெளியேற்றுதல் – தெளியவைத்து இறுத்தல்
28.
பொருத்துக:
1.
எளிதில்
உடையக்கூடியது – மண் பானை
2.
எளிதில்
வளையக்கூடியது – நெகிழி ஒயர்
3.
எளிதில்
இழுக்கலாம் – ரப்பர் வளையம்
4.
எளிதில்
அழுத்தலாம் - பருத்தி, கம்பளி
5.
எளிதில்
வெப்பமடையும் – உலோகத் தட்டு
29.
மனித
உடல் எடையில் சுமார் 7-8 சதவீதம் வரை இரத்தம் உள்ளது.
30. இரத்தத்தில் 4000
க்கும் மேற்பட்ட பகுதிப் பொருட்கள் உள்ளன.
31. பிளாஸ்மா என்ற திரவத்தில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் இரத்தத் திட்டுகள்
உள்ளன.
32.
இரத்தம்
என்பது தூய பொருள் அல்ல. அது ஒரு கலவை.
33. சூடான காற்று, குளிர்ந்த காற்றைவிட
லேசானதுஎன்ற பண்பின் அடிப்படையிலேயே
சூடான காற்று நிரம்பிய பலூன்கள் மேலே பறக்கிறது.
34.
பூக்கும்
தாவரங்கள் இரண்டு முக்கிய பாகங்களை கொண்டு உள்ளன. அவை 1.
தண்டுத் தொகுப்பு 2. வேர்த் தொகுப்பு
35.
நிலத்துக்கு
கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சு – வேர்
36. வேர்களில் கணுக்களும்,
கணுவிடைப் பகுதிகளும் இல்லை.
37. வேர் நுனிக்கு சற்று மேற்பகுதியில் வேர்த் தூவிகள் ஒரு கற்றையாக காணப்படுகிறது.
38.
தாவரங்களின்
வேர்த் தொகுப்புகள் இரண்டு வகைப்படும். அவை 1. ஆணி வேர்த்
தொகுப்பு 2. சல்லி வேர்த் தொகுப்பு
39.
ஆணி
வேர்த் தொகுப்பு – இருவித்திலை தாவரங்கள் - அவரை, மா,
வேம்பு
40.
சல்லி
வேர்த் தொகுப்பு – ஒரு வித்திலை தாவரங்கள் - நெல், புல்,
மக்காச் சோளம்
41.
வேரின் பணிகள்:
Ø
தாவரத்தை
பூமியில் நிலை நிறுத்துகின்றன. மண்ணை இறுக பற்றிக் கொள்ள உதவுகிறது.
Ø
மண்ணில்
உள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகின்றன.
Ø
சில
தாவரங்கள் தான் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன. எ.கா - கேரட், பீட்ரூட்
42.
நிலத்தின்
மேற்பரப்பில் வளர்கின்ற பகுதி – தண்டுத் தொகுப்பு
43. தண்டில் கணுக்களும்,
கணுவிடைப் பகுதிகளும் உள்ளன.
44.
தண்டில்
இலைகள் தோன்றும் பகுதி – கணு
45.
இரண்டு
கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் – கணுவிடைப் பகுதி
46.
தண்டின்
நுனியில் தோன்றும் மொட்டு – நுனி மொட்டு
47.
தண்டின்
இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு – கோண மொட்டு
48.
தண்டின் பணிகள்:
Ø
தண்டானது
கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றை தாங்குகின்றது.
Ø
வேரினால்
உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் தனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு
கடத்தப்படுகின்றது.
Ø
இலையினால்
தயாரிக்கப்பட்ட உணவு தண்டின் வழியாக மற்ற தாவரத்தின் பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
Ø
சில
தாவரங்கள் உணவை சேமித்து வைக்கின்றன. எ.கா. கரும்பு
49.
பொருத்துக:
1.
கண்களால்
பார்க்ககூடிய தேவையற்ற பகுதிப் பொருளை நீக்குதல் – அரிசி மற்றும் கல் – கைகளால் தேர்வு செய்தல்
2.
லேசான
மற்றும் கனமான பகுதிப் பொருட்களை பிரித்தல் – உமி மற்றும் நெல் – தூற்றுதல்
3.
கரையாத
மாசுப் பொருள்களை நீக்குதல் – சுண்ணாம்புக் கட்டி நீருடன் கலந்திருத்தல் – தெளிய வைத்து இறுத்தல்
4.
காந்தத்
தன்மை கொண்ட பகுதிப்பொருளை காந்தத்தன்மை அற்ற பகுதிப்பொருட்களில் இருந்து பிரித்தல்
– இரும்பு சார்ந்த பொருட்கள் – காந்தப் பிரிப்பு முறை
5.
நீர்மங்களில்
இருந்து திண்மங்களை பிரித்தல் – மணல் மற்றும் நீர் – வடிகட்டுதல்
50.
தண்டையும்,
இலையை இணைக்கும் காம்புப் பகுதி – இலைக் காம்பு
ஆக்கம்:
1. செ. தமிழ்செல்வம் B.Sc, M.Ed
2. வே. பிரகாஷ் M.Sc, B.Ed,
3. செ. லெனின் M.Sc, B.Ed,
கருத்துகள்
கருத்துரையிடுக