நடப்பு நிகழ்வுகள்
06-07-2018
v தமிழ்நாடு பொது கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துறைமுருகன் நியமனம்.
v யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் இயக்குனர் மற்றும் பொதுமேலாளராக விஜய் ஶ்ரீனிவாஸ் நியமனம்.
v நிதிஆயோக் சார்பில், இந்தியாவின் முதல் உலகலாவிய நகர்த்திறன் உச்சி
மாநாடு டெல்லியில் நடைப்பெறயுள்ளது.
v இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி அலகு பெங்களூரில் அமைய உள்ளது.
v காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு என பொருள்படும் KIMIS என்ற ஒருங்கிணைந்த இணைய சந்தைப்படுத்துதல்
தளத்தை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
Ø KIMIS – Khadi Institution
Management and Information System
v உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை
ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் 2022 குள் ரூ. 1 இலட்சம் கோடி நிதி திரட்ட முடிவு.
v காவிரி ஒழுங்காற்று குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நவீன்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
– (ஜீலை 5)
v கேரளாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என
கேரளா அரசு அறிவிப்பு.
v தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதி பெறாமல் வைத்துக்
கொள்ளக் கூடிய நில உச்ச வரம்பு 15 ஏக்கரில் இருந்து 30 ஏக்கராக
உயர்த்தப்பட்டுள்ளது.
v உலகின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள இடம் – ஜப்பான் தலைநகர் டோக்கியோ
v துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதராக இந்திய சிறுவன் ஃபயஸ் முகமது நியமனம்.
v உலக விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு
தினம் – ஜீலை 06
கருத்துகள்
கருத்துரையிடுக