நடப்பு நிகழ்வுகள்
01-06-2018 TO 02-06-2018
Ø ரூ.150
கோடி மதிப்புள்ள ராஜராஜசோழன் சிலை மற்றும் பட்டத்தரசி உலகமாதேவி சிலை குஜராத் மாநிலம்
அகமதாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.
Ø இருமுறை
சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா காலமானார்.
Ø நாட்டிலேயே
முதன்முறையாக கோவையில் புகையிலை தீமைகளை விளக்கும்
மின்னணு கையேடு வெளியிடப்பட்டது.
Ø கல்வி
நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை விற்பனையைத் தடுக்கும் வகையில் SAFE ZONE என்னும் புதிய செயலி அறிமுகம்.
Ø தருமபுரியில் ஆலம்பாடி மாட்டு இன ஆராய்ச்சி மையம்
அமைக்கப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
Ø தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்தின்
மூத்த காவல் கண்காணிப்பாளர் புபுல் தத்தா பிராத் தலைமையில்
5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Ø ஐ.நா.
படையில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியா முதலிடம்.
Ø பெண்கள்
தொடர்பான வழக்குகளுக்கான முதல் தடய அறிவியல் சோதனை கூடம் சண்டிகரில்
அமைக்க அடிக்கல் நாட்டினார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்
துறை அமைச்சர் மேனகா காந்தி.
Ø இந்தியா
சார்பில் இலங்கைக்கு 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Ø மேற்கு
வங்கத்திற்கான பிரத்யோக பாதுகாப்பு ஆலோசகர் – ஓய்வு பெற்ற
DGP. சுரஜித்கர் புர்க்ஷா
Ø இராணுவ
நடவடிக்கைகளுக்கான இந்திய தளபதி- அனில் சௌஹான்
Ø 2018 மலபார் கடற்படை போர் பயிற்சி:
· நடைப்பெறவுள்ள
இடம் – பிலிப்பைன்ஸ் கடலில் குவாம் கடற்கரை
· பங்கேற்கும்
நாடுகள் – இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்
Ø நீண்ட தூர விமான சேவை:
· வழங்கும்
நிறுவனம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
· சிங்கப்பூர்
முதல் நியூயார்க் வரை
· (15348 கி.மீ) – 18 மணி நேரம் 45 நிமிடங்கள்
Ø அமெரிக்காவின்
Spelling Bee போட்டியில் பட்டம் வென்றவர் – இந்திய வம்சாவளி மாணவர் கார்த்திக் நெம்மானி (14 வயது).
Ø இந்தியா- சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Ø ஸ்பெயின்
நாட்டின் புதிய பிரதமர் – பெட்ரோ சான்செய். இதற்கு முன் – மரியரனா ரஜாய்
Ø மத்திய
தகவல் ஒலிபரப்பு செயலராக அமித் கரே நியமனம்.
Ø உலக பால்
தினம் – ஜீன் 01
Ø உலக பெற்றோர்
தினம் - ஜீன் 01
கருத்துகள்
கருத்துரையிடுக