நடப்பு நிகழ்வுகள்
05-06-2018 TO 06-06-2018
v இந்திய அரசின் பழங்குடியினர்
நலத்துறை சார்பில் உதகையில் பழங்குடியின
கைவினை பொருட்கள் கண்காட்சி தொடக்கம்.
v ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பாலமாருதிராம் ஆசிய யோகா போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றார்.
v மத்திய பிரதேசம் விதிஷா நகராட்சி தூதுவராக சஞ்சீவ் ஶ்ரீவஸ்தவா நியமனம்.
v உலகளவில் அதிக அளவில் உழைப்பவர்கள் – மும்பை வாசிகள் என சுவிட்சர்லாந்து
வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
v பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1, 2019 முதல் தடை என
தமிழக அரசு அறிவிப்பு.
v வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சி மையம் சார்பில் போலீஸ் பப்ளிக் ஸ்கூல் திறக்கப்பட்டுள்ளது.
v 2017 ஆம் ஆண்டிற்கான பசுமை விருதை பெற்ற கல்வி நிறுவனம்
– VELLORE VIT UNIVERSITY.
v அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண்களுக்கு தலா 50
நாட்டுக் கோழிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
v சென்னை அடுத்த திருவொற்றியூர்
குப்பத்தில் ரூ.200 கோடியில் சூறை மீன்பிடி
துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
v நாட்றம்பள்ளி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தில்
கி.பி. 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாளுவ நரசிங்கர் காலத்து கல்வெட்டு கண்டறியப்பட்டது.
v 2018 ம் ஆண்டுக்கான இந்திய மிஸ் QUEEN – லட்சுமிமேனன்(கேரளா).
v ஆண்களுக்கு பேறு கால விடுமுறையாக 15 நாட்கள் எடுத்து
கொள்ளலாம் என ஹரியானா அரசு அறிவிப்பு.
v வீரமரணம் அடைந்த இராணுவத்தினருக்கு டிஜிட்டல் முறையில்
அஞ்சலி செலுத்தும் வகையில் பாரத் கா வீரர்(இந்தியாவின் வீரர்)
என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
v நிபா வைரஸ் காரணமாக கேரள மாநிலத்திலிருந்து வரும்
பொருட்களுக்கு சவுதி அரேபியா நாடு தடை விதித்துள்ளது.
v கிரிடிட் கார்டு நிலுவைத்தொகை, மியூச்சுவல் பண்ட்
வெளியேறும் கட்டணம் போன்றவை GST வரம்புக்குள் வரும் என அறிவிப்பு.
v திரிபுரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக அன்னாசிப் பழம் அறிவிப்பு.
v டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில்
விராட் கோலியின் மெழுகுச்
சிலை திறக்கப்பட்டுள்ளது.
v உலக கிக் பாக்சிங் போட்டி:
ü நடைப்பெற்ற இடம் – ரஷ்யாவின் அனபா நகர்.
ü 79Kg பிரிவில் – சென்னை மாணவர் வசீகரன் தங்கப் பதக்கம்
வென்றார்.
ü இதே பிரிவில் - சென்னை மாணவர் அருண் தனிஷ்க் வெண்கலப் பதக்கம்
வென்றார்.
v அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரியான கெல்லி சாட்லர் தனது பதவியை
ராஜினாமா செய்துள்ளார்.
v 2018 ஆம் ஆண்டின் உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்:
1. பிளாய்டு மேவெதர் (அமெரிக்கா)
2. லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
3. கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுக்கல்)
83. விராட் கோலி (இந்தியா)
- வெளியிட்ட நிறுவனம் – போர்ப்ஸ் பத்திரிக்கை
v காவிரி ஆணைய இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம்.
v ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் RBI உயர்த்தியது.
-
தற்போது ரெபோ
வட்டி விகிதம் – 6.25 சதவீதம்.
v உலக சுற்றுச்சூழல் தினம் – ஜீன் 05
கருத்துகள்
கருத்துரையிடுக