நடப்பு நிகழ்வுகள்
12-06-2018 TO 13-06-2018
1. எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகள்
இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
2. சென்னை
மாநகராட்சிக்கு GIZ என்ற ஜெர்மனி நிறுவனம் The
transformative Urban mobility initiative என்ற விருதை வழங்கியுள்ளது.
3. கும்பகோணம் நகராட்சி திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில்
முன் மாதிரியாக உருவெடுத்துள்ளது.
4. மத்திய
அமைச்சர் மகேஷ் சர்மா ஆக்ரா நகர மக்களிடம் நெகிழி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான தாஜ் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
5. இரஷ்யாவின்
கேஸ்புரோமிடமிருந்து இந்தியா தனது முதல் மலிவான திரவ இயற்கை
எரிவாயுவை பெற்றிருக்கிறது.
6. ICGSC 439 என்ற இடைமறிப்பு கப்பல் இந்திய கடலோர காவற்படையில்
சேர்க்கப்பட்டுள்ளது.
7. உலக அறிவுசார்
சொத்தரிமை அமைப்பின் இலக்கியம் மற்றும் கலை படைப்புகளின் பெர்னே
உடன்படிக்கையில் இந்தியா இணைந்துள்ளது.
8. CSIR ஆய்வகம் மற்றும் RAASI சோலார் ஆற்றல் எனும் தனியார் நிறுவனம் இணைந்து இந்தியாவின்
முதல் லித்தியம்- இரும்பு திட்டத்தின் தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
9. சிக்கிம்
மாநிலத்தின் நீண்ட சுரங்க பாதை – தேங் சுரங்கப் பாதை
(578 மீ)
10.
மூன்றாவது ஒலி மாசடைந்த நகரம் – ஹைதராபாத்
11.
பிரிட்டன்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாளை குறிப்பிடும் விதமாக நடைப்பெற்ற வருடாந்திர
அணி வகுப்பில் முதல் முறையாக கரடியின் தோலாலான தொப்பிக்கு பதிலாக தலைப்பாகை அணிந்த
நபர் கோல்ட் ஸ்ட்ரீம் படையை சேர்ந்த சரண்ப்ரீத் சிங் லால்
என்ற சீக்கியர்.
12.
சீனா தனது முதல் உயரிய அரசு மரியாதையுடைய நட்பு பதக்கத்தை இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு
அணிவித்துள்ளது.
13.
BIMSSTEC
அமைப்பின்
முதல் இராணுவ பயிற்சி நடைப்பெறவுள்ள இடம் – புனே
14.
உலகின் முதல் ஐரோப்பிய அழுத்த அணுசக்தி உலை – சீனாவின் தைவானில் உள்ள மூன்றாம் தலைமுறை ஐரோப்பிய அழுத்த
உலையானது தனது முதல் அணு சக்தி சங்கிலித் தொடர் செயல் வினையை மேற்கொண்டுள்ளது.
15.
உலக பொருளாதார மன்றத்தின் மேலாண்மை குழுவிற்கு சரிதா நய்யார் நியமனம்.
16.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக
அரவிந்த் சக்ஸேனா நியமனம்.
17.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக
K.V. சௌத்ரி நியமனம்.
18. ஊழல் கண்காணிப்பு
ஆணையராக
T.M. பாசின் நியமனம்.
19. 3 வது ஆசிய – பசுபிக் பிராந்திய
மாநாடு நடைப்பெற்ற இடம் – நேபாள தலைநகர் காத்மண்ட்.
20. உலக மூளைக் கட்டி
தினம் – ஜீன் 08
கருத்துகள்
கருத்துரையிடுக