நடப்பு நிகழ்வுகள்
25-05-2018 TO 26-05-2018
1. வடகொரியாவின்
ஒரே அணு ஆயுத சோதனை தளமான புங்கியேரி சோதனை தளத்தை
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மே 24 ஆம் தேதி வெடி வைத்து தகர்த்துள்ளது.
2. விஸ்வபாரதி
பல்கலைகழகத்தில் வங்கதேச பவன் என்ற பெயரில் அருங்காட்சியகத்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் திறந்து வைத்தனர்.
3. இந்தியா-சீனா
எல்லையில் நவீன எச்சரிக்கை கண்காணிப்பு அமைப்பை சீனா
உருவாக்கியுள்ளது.
4. செவ்வாய்
கிரகத்தில் 2 அங்குல துளையிட்டு, அமெரிக்காவின் கியூரியாசிட்டி
ரோவர் விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.
5. 2017-2018
ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.55 சதவீதம்
என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளது.
6. உத்திர
பிரதேச மாநிலத்தின் அலகாபாத் மாவட்டத்தின் பெயரை பிரயக்ராஜ் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக உத்திர பிரதேச
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார்.
7. புதுடெல்லியில்
முதல்முறையாக பள்ளியின் முதல்நிலை முதல் உயர்நிலை வரை ஆதரவு வழங்குவதற்கான சமார்க சிக்சா திட்டத்தை, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார்.
8. 163 ஆண்டுகள்
பழமையான பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில் இன்ஜின் எழும்பூர்
– கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது.
9. 2018
ஆம் ஆண்டின் ஆசியான் இந்தியா திரைப்பட விழா நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
10.
ஒடிசா மாநிலத்தின்
புதிய ஆளுநர் – கணேஷி லால்
11.
மிசோரம்
மாநிலத்தின் புதிய ஆளுநர் – கும்மணம் ராஜசேகரன்
12.
2017 ஆம்
ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்கள் – INSV
தாரிணி கடற்படை பெண்கள் அதிகாரிகள் குழு
13.
2017-2018 நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 18% வளர்ச்சி
14.
சென்னை
மாநகரில் மே 25 ல் நேரு பூங்கா – சென்ரல் (2.7Km) மற்றும்
சின்னமலை- தேனாம்பேட்டை (4.5Km) கொண்ட சுரங்கபாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் தொடங்கி
வைத்தனர்.
15.
சர்வதேச
காணாமல் போன குழந்தைகள் தினம் – மே 25
கருத்துகள்
கருத்துரையிடுக