நடப்பு
நிகழ்வுகள்
20-06-2018
TO 21-06-2018
v சேலம்
– சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமைச்சாலை
அமைக்க தமிழக அரசு திட்டம்.
- மொத்த நீளம் – 273.4 கி.மீ
- சாலை அமையவுள்ள மாவட்டங்கள் – காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,
தருமபுரி, சேலம்.
v 2018 ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது பெற்றவர்- பெ.சின்னப்பிள்ளை
பெருமாள்.
v மதுரை
மாவட்டம் தோப்பூரில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை
அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
v M.S. சுவாமிநாதனுக்கு மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில்
உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
v மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை
தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியாணா மாநிலம்.
v சிக்கிம் மாநில தூதுவராக இசையமைப்பாளர் A.R.ரஹ்மான்
நியமனம்.
v இந்திய அழகி போட்டியில் பட்டம் வென்றவர் – அனுக்ரீத்தி
வாஸ் (தமிழ்நாடு)
v ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளில் 8 வது முறையாக ஆளுநர் ஆட்சி அமல்.
v ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா
அறிவித்துள்ளது.
v விவசாய மாநாடு நடைபெற்ற இடம் – புனே
-
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கய்ய
நாயுடு தொடங்கி வைத்தார்.
v உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த
சூப்பர் கம்ப்யூட்டரான சம்மிட் எனப்படும்
அதிவேக கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
v அணு வினியோகக் குழு அமைப்பின் 28 வது கூட்டம் நடைப்பெற்ற இடம் – லாட்வியா
நாட்டின், ஜீர்மலா நகர்.
v கேரளா மாநிலத்தில் ஆர்டர்லி சேவையை இரத்து செய்தார் முதல்வர் பினராயி விஜயன்.
v தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை மாதவரத்தில் அடுக்குமாடி
பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
v 2018
மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் தொடர்:
Ø நடைபெற்ற இடம் – ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகர்.
Ø பட்டம் வென்றவர் – ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)
v 4 வது சர்வதேச யோகா தினம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைப்பெற்றது.
v ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள RAC மைதானத்தில் 2 இலட்சம் பேர்
யோகா செய்தது உலக சாதனையாக அங்கீகரித்தது கின்னஸ் அமைப்பு.
v கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நாட்டில் முதல் முறையாக திருநங்கை
ஜியாதாஸ்
அறுவை சிகிச்சை அரங்கின் தொழில்நுட்ப உதவியாளராக நியமனம்.
v அல்கய்தாவின் கிளை அமைப்பான அல்-கய்தா இந்திய துணை கண்டம்,
IS அமைப்பின் கிளை பிரிவான ISI S-K ஆகியவை சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியா தடை விதித்துள்ளது.
v சுரிநாம் நாட்டின் சூரிய ஒளி மின் திட்டம் உட்பட வளர்ச்சி திட்டங்களுக்கு
இந்தியா சார்பில் ரூ.347 கோடி வழங்கப்படும் என்று குடியரசு தலைவர் இராம்நாத்
கோவிந்த் அறிவித்தார்.
v சுரிநாம் நாட்டின் அதிபர் – டிசையர் டிலானோ பவுட்டர்ஸ்.
v உலக அகதிகள் தினம் – ஜீன் 20
v உலக யோகா தினம் – ஜுன் 21
கருத்துகள்
கருத்துரையிடுக