நடப்பு நிகழ்வுகள்
22-05-2018
1. அருணாச்சல
பிரதேச எல்லையில் லுன்சே என்ற இடத்தில் ரூ.4 இலட்சம்
கோடி மதிப்புள்ள தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி
வருகிறது.
2. ISRO
விஞ்ஞானிகள்
விண்கலன்களையும் செயற்கைக் கோள்களையும் செலுத்துவதற்கு சூழலுக்கு உகந்த ஹைட்ராக்ஸில் அமோனியம் நைட்ரேட் எரிபொருளை தயாரித்திருக்கின்றனர்.
- இதற்கு
முன் ஹைட்ராக்ஸைன் எரிபொருளை பயன்படுத்தி வந்தனர்.
3. கர்நாடக
மாநிலத்தின் 24 வது முதல்வர் – குமாரசாமி.
4. சுதந்தரத்திற்கு
பிறகு முதல் முறையாக அருணாச்சல பிரதேசத்தில் பயணிகள்
விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- அசாமின் குவகாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அலையன்ஸ்
ஏர்லைன்ஸ் விமானம் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் விமான
நிலையத்தில் தரையிறங்கியது.
5. இந்தியாவின்
முதல் எரிசக்தி ஒழுங்குமுறை மையம் – IIT கான்பூரில் அமைந்துள்ளது.
6. 2018
ஆம் ஆண்டின் BASIC அமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள்
மாநாடு நடைப்பெற்ற இடம் – தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகர்.
- இந்தியா
சார்பில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பங்கேற்றார்.
7. 2018
உலக துப்பாக்கி சுடும் போட்டி நடுவர் குழுத் தலைவராக இந்தியர் பவன் சிங் நியமனம்.
8. அமெரிக்காவின்
புலனாய்வு அமைப்பான CIA (CENTRAL INTELLIGENCE AGENCY) அமைப்பின்
முதல் பெண் இயக்குனர் – ஜினா ஹேஸ்பெல்
9. 2018
ஆம் ஆண்டின் ஐரோப்பிய கோல்டன் ஷீ விருதை வென்றவர் – லியோனல்
மெஸ்சி (இதுவரை 5 முறை)
10.
2018 தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர்
பிரிவில், இந்தியாவின் சத்யன் – சனில் ஷெட்டி இணை வெள்ளிப்
பதக்கம் வென்றுள்ளது.
11.
2016 ஆம் ஆண்டுக்கான தரமான சுகாதார வசதி அளிக்கும்
நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு
145 வது இடம்.
12.
உலகின் பெரிய சூரிய ஆற்றல் சந்தை பட்டியல்:
1. சீனா
2. அமெரிக்கா
3. இந்தியா
13.
பயங்கரவாத எதிர்ப்பு தினம் - மே 21
14.
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் – மே 22
- கருப்பொருள் – 25 வருட பல்லுயிர் நடவடிக்கைகளுக்கான கொண்டாட்டம்.
கருத்துகள்
கருத்துரையிடுக