நடப்பு நிகழ்வுகள்
08-05-2018
1.
2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலிடு
(FDI) நம்பகத் தன்மை குறியீடு (Foreign Direct Investment (FDI) Confidence
Index) பட்டியலில், இந்தியா 11
ஆவது இடத்தில் உள்ளது.
2. மணிப்பூர் மாநில அரசு இம்பால் மேற்கு மாவட்டத்தில் கொம்மஹோங் கிராம பஞ்சாயத்தில் கிராமத்திற்கு செல் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
3. NITI Aayog அமைப்பு மற்றும்
IBM நிறுவனம் ஆகியற்றுக்கிடையே, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான
விவசாயம், பயிர் விலைச்சல் கணிப்பு மாதிரியை உருவாக்கும் திட்டத்தில் ஒப்பந்தம்.
4. உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பஞ்சாப் மாநில அரசு இணைந்து முதலாவது ஒருங்கிணைந்த சிந்து நதி டால்பின்கள் கணக்கெடுப்பை மேற்க்கொண்டுள்ளன.
5. 12-வது சார்க் நிதியமைச்சர்கள் முறைசாரா கூட்டம், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய வளர்ச்சி வங்கியின்
51 வது ஆண்டுக்கூட்டத்தின் இடையே நடைப்பெற்றது.
-
இந்தியா சார்பில் பொருளாதார விவகார துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்கின்
தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
6. 15 வது ஆசிய ஊடக உச்சி மாநாடு
புதுடெல்லியில் “ Telling our stories Asia and
more “ என்ற தலைப்பில் நடைப்பெற்றது.
7. 2018 ஜீன் 17 முதல் 21 வரை மேற்கு வங்க மாநில கொல்கத்தா நகரில் சர்வதேச குழந்தைகள் திரையரங்கு விழா நடைப்பெறவுள்ளது.
8. 2018-19 இல் இந்தியாவின் வளர்ச்சி 7.3% - ஆக இருக்கும்
என ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு.
-
2019-20 இல் இந்தியாவின் வளர்ச்சி 7.6% - ஆக இருக்கும்
என அறிவித்துள்ளது.
9. பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் ஜெயலலிதாவின்
நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் K. பழனிசாமி.
10.
32-வது பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டி:
-
ஆண்கள் பிரிவில் – சென்னை
IOB அணி வெற்றி
-
பெண்கள் பிரிவில் – கேரளா மகளிர்
அணி வெற்றி
11. 2018 தெற்காசிய ஜீனியர் தடகள போட்டி :
1. இந்தியா
– 20 தங்கம் , 22 வெள்ளி, 8- வெண்கலம்
2.
இலங்கை
3. பாகிஸ்தான்
12.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விளையாட்டு முன் முயற்சி
திட்டத்தை (Star Khel Mahakumbh,, sports initiative) அனுராக் தாக்கூர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரால்
தொடங்கி வைக்கப்பட்டது.
13. ஐ.நா. அமைப்பால் இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களுக்கான
நினைவு மற்றும் நல்லிணக்க தினம் may– 8 & may – 9 ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
14. அபுதாகி ஓபன் ஸ்குவாஸ் 2018 பட்டத்தை வென்றார் இந்தியாவின் ராமிட் டாண்டன்.
15. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால்
(Ministry of Panchayati Raj) நாட்டின் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ள
கிராமம் – திகம்பூர் கிராமப் பஞ்சாயத்து(மேற்கு வங்காளம்).
16.
வருணா கடற்படை
கூட்டு
போர் பயிற்சி:
- நடைப்பெற்ற இடம் – ரீயுனியன் தீவில்
- இந்தியா
மற்றும் பிரான்ஸ்
17. ஆறாவது
இந்தியப்
பெருங்கடல்
கடற்படை
கருத்தரங்கம்
நடைப்பெற்ற இடம் – ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான்.
18. புதிய வாராந்திர
(weekly) துர்க் பெரோஸ்பூர் – துர்க்
அந்தோதயா எக்ஸ்பிரஸ் (Durg- Ferozpur-Durg
Antyodaya Express) தென் கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின்
(South East Central Railway -SECR zone) கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள ராய்ப்பூர் இரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
19. 2018 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவில் இரண்டாவது உலக இந்து மாநாடு நடைபெற உள்ளது.
-
அமெரிக்க நாடாளுமன்றத்தின்
(US Congress)
முதல் இந்து சட்ட அவை உறுப்பினரான துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) இந்த இரண்டாவது இந்து சிகாகோ மாநாட்டிற்குத் தலைவராவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக