நடப்பு நிகழ்வுகள்
19-05-2018 TO 20-05-2018
1. ஐ.நா. நகரமயமாக்கல் ஆய்வறிக்கை 2018:
- உலகளவில் 55% பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். இது 2050 ல் 68% உயர வாய்ப்புள்ளது.
2. உலகளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியல் 2018:
1. டோக்கியோ
(ஜப்பான்)
2. டெல்லி (இந்தியா)
3. ஷாங்காய்
(சீனா)
3. மக்கள்
தொகை அதிகரித்து வரும் நகரங்கள் உடைய நாடுகள் பட்டியல்:
1. இந்தியா
2. சீனா
3. நைஜீரியா
4. காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14Km தூரத்துக்கு ஆசியாவின் மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதைக்கு அடிக்கல்
நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
5. காஷ்மீரின் குரேஷ் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள கிஷன் கங்கா மின்திட்டத்தை பிரதமர்
நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
6. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்
தலைமையிடம் அமையவுள்ள இடம் – புதுடெல்லி
7. காவிரி ஒழுங்காற்றுக் குழு
தலைமை அலுவலகம் அமையவுள்ள இடம் – பெங்களூர்.
8. சத்ர
பரிவஹன் சுரக்சா யோஜனா என்ற பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை
உறுதி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியானா
மாநிலம்
9. புத்த துறவி 19- வது குஷாக் பகுலா ரின்போச்சின் நூற்றாண்டு பிறந்த தின
கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மே 19 அன்று பங்கேற்றார்.
10. 2018 துணிகர மூலதன கருத்தரங்கம்
நடைப்பெற்ற இடம் - புதுடெல்லி
11. 2018 ஐரோப்பிய யூனியன் சிறப்பு
விருது பெற்றவர் – அமிதாப்பச்சன்
- ஐரோப்பிய நாள் – மே
09
12. 2018 கேன்ஸ் சிறந்த திரைப்பட
பால்மே டிஓர் விருது பெற்ற படம் – ஷாப்ளிப்ட்டர்ஸ்
(ஜப்பானிய குடும்ப நாடகம்)
13. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய
தலைவர் – ராஜிந்தர் சிங்
14. ஜிம்பாவே
நாட்டின் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள்
வீரர் லால்சந்த் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
15. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு
பிறகு 2017 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சூரிய ஒளி சந்தையாக உருவெடுத்துள்ள
நாடு – இந்தியா
16. அர்மேனியா நாட்டின் புதிய
பிரதமர் – நிக்கோல் பஷின்யான்
17. உறைந்த விந்தணு நிலையங்கள்
இராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் பீகாரில் உள்ள மராங்கா
மற்றும் புர்நியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
18.
நெருக்கடி மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த மையத்தினை
(Integrated Centre for Crisis Management -ICCM) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre -BARC) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
19. மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகளின் நல்வாழ்வினிற்காக,
மன்னிப்பு
உடனான மறுவாழ்வுத் திட்டத்திற்கு
(amnesty-cum-rehabilitation scheme) கேரள மாநில கேபினேட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
20. நியூயார்க் போலிஸில் இணைந்த
முதல் சீக்கிய பெண் – குர்சோத் கவுர்
21. உலகின்
பணக்கார நாடுகள் பட்டியல்:
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
6. இந்தியா
22. சர்வதேச அருங்காட்சியகம் தினம்
– மே 18
23. உலக தேனீ தினம் – மே 20
கருத்துகள்
கருத்துரையிடுக